காலி ரத்கம கம்மெத்தே கொட பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் மூவர் காயமடைந்துள்ளனர்.

இன்று (31) பிற்பகல் மோட்டார் சைக்கிளில் வந்த இருவரே துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பகுதியில் உள்ள வீடொன்றில் இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளதுடன், துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

காயமடைந்த ஏனைய மூவரும் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவத்தில் 48 வயதுடைய ஒருவரே உயிரிழந்துள்ளதுடன், ரத்கம பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இதேவேளை கொழும்பு கரையோர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட விவேகானந்தா வீதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்று (30) இரவு மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவரினால் இந்த துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

கொட்டாஞ்சேனை விவேகானந்தா வீதி பகுதியில் வசிக்கும் 51 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.