ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக்கரை பிரதேசத்திலுள்ள நப்லூஸ் நகரில் நேற்றிரவு (23) இரு பலஸ்தீன இளைஞர்கள் இஸ்ரேலிய இராணுவத்தினரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக பலஸ்தீன சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அவர்களில் 25 வயதான மொஹமட் அஸீஸி மார்பில் சுடப்பட்ட நிலையிலும், 28 வயதான அப்துர் ரஹ்மான் ஜமால் சுலைமான் சொப்ஹ் தலையில் சுடப்பட்ட நிலையிலும் உயிரிழந்துள்ளனர்.

இஸ்ரேலிய இராணுவத்தினர் நள்ளிரவு தாண்டிய நேரத்தில் பழைய நப்லூஸ் நகருக்குள் பிரவேசித்து அங்குள்ள வீடுகள் மீது தாக்குதல் நடாத்தியுள்ளதுடன் துப்பாக்கி சூடு நடாத்தியுள்ள நிலையில் இருவர் உயிரிழந்துள்ளதாக பலஸ்தீன ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.

இது தவிர மேலும் 12 பேர் காயமடைந்துள்ளதாகவும், ஒருவரது நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் பலஸ்தீன செம்பிறை இயக்கம் தெரிவித்துள்ளது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.