எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கிடையில் இன்று கூட்டம் ஒன்று இடம்பெற்றது.

இதன்போதே, இந்த தீர்மானம் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளிக்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தீர்மானித்துள்ளதாக, அக்கட்சியின் செயலாளர் நாயகம் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

அத்துடன், ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடத் தீர்மானித்த முன்னாள் அமைச்சர் டலஸ் அழகப்பெருமவுக்கு ஆதரவளிக்கப் போவதில்லை என தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சாகர காரியவசம் மேலும் தெரிவித்துள்ளார்.


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.