இவ்வார இறுதிக்குள் மேலும் 10 அமைச்சுப்பதவிகள் வழங்கப்படவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதனை தொடர்ந்து மாகாணங்களுக்கான ஆளுநர்களும் நியமிக்கப்படவுள்ளனர். 

ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுக்கு 5 ஆளுநர் பதவிகளும், ஐக்கிய தேசிய கட்சிக்கு 4 ஆளுநர் பதவிகளும் வழங்கப்படவுள்ளதாகவும் தெரியவருகிறது. 

ஐக்கிய தேசிய கட்சி சார்பில் ஆளுநர்களாக பதவியேற்கவுள்ளவர்களில் மூவரில் முன்னாள் அமைச்சர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது. 

எதிர்வரும் மார்ச் மாதத்தில் உள்ளுராட்சி மன்ற தேர்தல்கள் இடம்பெறவுள்ள நிலையில் அதற்கு முன்னர் ஆளுநர்கள் நியமிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. - Siyane News

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.