ஐக்கிய அரபு இராச்சியத்தின் மூன்றாவது அரச தலைவரும் அபுதாபியின் ஆட்சியாளருமான ஷெய்க் முஹம்மத் பின் ஸைத் அல் நஹ்யான் புதிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஸ்திரத்தன்மை மற்றும் சமாதானத்தை நோக்கி இலங்கையை இட்டுச் செல்வதிலும், இக்கட்டான சூழ்நிலைகளை முறியடிப்பதிலும் ஜனாதிபதி வெற்றிபெற வேண்டும் என்று அவர் இதன் போது தெரிவித்துள்ளார்.
இருவரும் இரு நாடுகளுக்கிடையிலான உறவுகளை மேம்படுத்தல் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் கருத்துக்களை பரிமாறிக்கொண்டுள்ளனர். - Siyane News