அரசியல் கட்சிகளுடன் தொடர்புடைய இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் சில தொழிற்சங்கங்கள் நாளை (22) எதிர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாக எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தொடர்பில் முன்வைக்கப்படும் சீர்திருத்தங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து தொழிற்சங்கங்கள் போராட்டங்களை நடத்தவுள்ளதாக அமைச்சர் குற்றம் சாட்டியுள்ளார்.

இலங்கை மின்சார சபையையும் மறுசீரமைப்பதற்காக அமைச்சர் அண்மையில் ஏழு பேர் கொண்ட குழுவொன்றை நியமித்திருந்தார்.

பெட்ரோலியப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கும் விநியோகிப்பதற்கும் விற்பதற்கும் பொருத்தமான நிறுவனங்களை மதிப்பிடுவதற்கு இந்தக் குழு பணிக்கப்பட்டுள்ளது, அதற்கேற்ப இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் மற்றும் LIOC உடன் பல நிறுவனங்கள் பெட்ரோலியத் தொழிலில் ஈடுபடவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.