குருணாகல் மாநகர சபைக்கு உட்பட்ட இறைச்சிக் கடைகளைத் திறப்பதற்கு மீண்டும் அனுமதி கிடைத்துள்ளது. 

குருணாகல் மாநகர சபை உறுப்பினர் முகம்மது அஸாருதீன் திங்கட்கிழமை காலை இறைச்சிக் கடைகளைத் திறப்பது தொடர்பான தனிநபர் பிரேரணைக்கு இம்மாநகரசபையின் அன்று சமூகமளித்திருந்த 18 உறுப்பினர்களும் ஏக மனதான அங்கீகாரத்தை வழங்கியுள்ளனர். 

இதன்மூலம் குருணாகல் மாநகரசபைக்கு உட்பட்ட 7 இறைச்சிக் கடைகளையும்  மீண்டும் திறப்பதற்கான அனுமதி கிடைத்துள்ளதாக மாநகர சபை உறுப்பினர் அஸாருதீன் எமது சியன செய்தி சேவைக்குத் தெரிவித்தார். 

இம்மாநகர சபையில் 21 உறுப்பினர்கள் இருக்கின்றனர். இவர்களில் அன்று சமூகமளித்திருந்த 18 உறுப்பினர்களும் ஏக மனதாக இந்தப் பிரேரணைக்கு ஆதரவு  வழங்கியதாக அவர் மேலும் தெரிவித்தார். 

குருணாகலை மாநகர சபைக்கு உட்பட்ட இறைச்சிக் கடைகள் யாவும் சஹ்ரான் குழுவினரின் குண்டுத்தாக்குதலால்  2018 ஆம் ஆண்டு முதல் மூடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.