கம்பஹா ஸ்ரீ போதி மைதானத்தில் இடம்பெற்ற கம்பஹா கல்வி வலய பாடசாலைகளுக்கு இடையிலான கால்பந்தாட்ட போட்டிகளில், 16 வயதுக்கு உட்பட்ட பிரிவினருக்கான சுற்றுப்போட்டியில் கஹட்டோவிட்ட அல் பத்ரியா மகா வித்தியாலய அணி சம்பியனாகியது.
இன்று (04) இடம்பெற்ற இறுதிப்போட்டியில் மயூரபாத மகா வித்தியாலய அணியை 4 - 0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியே கஹட்டோவிட்ட பத்ரியா அணி சம்பியனாக தெரிவானது.
இதுவேளை 20 வயதுக்கு உட்பட்டோருக்கான பிரிவில் திஹாரிய அல் அஸ்ஹர் தேசிய பாடாசாலை அணி சம்பியனாகியமை குறிப்பிடத்தக்கது. - Siyane News