சப்ரகமுவ,மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும்  அத்துடன் கண்டி, நுவரேலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடையே  மழை பெய்யக்கூடும்.

மத்திய மலைப்பிராந்தியங்களின் மேற்கு சரிவுகளில் மணித்தியாலத்திற்கு 50 km வேகத்தில் அடிக்கடி பலத்த காற்று வீசக்கூடும்.

கடல் பிராந்தியங்களில் 
****************************

புத்தளம் தொடக்கம் கொழும்பு, காலி ஊடாக மாத்தறை வரையான கரையோரத்திற்கு அப்பால் உள்ள கடல் பிராந்தியங்களில் இடைக்கிடையே  மழை  பெய்யக்கூடும்.

கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 30 ‐ 40 km வேகத்தில் தென்மேற்குத் திசையில் இருந்து காற்று வீசும். 

புத்தளம்  தொடக்கம் மன்னார், காங்கேசன்துறை  ஊடாக திருகோணமலை  வரையான அத்துடன் ஹம்பாந்தோட்டை தொடக்கம் பொத்துவில் வரையான  கரையோரத்திற்கு அப்பால் உள்ள  கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 50 ‐ 60 km இலும் கூடிய  வேகத்தில் அடிக்கடி காற்று அதிகரித்து வீசக்கூடும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் இக் கடல் பிராந்தியங்கள் கொந்தளிப்பாகக் காணப்படும். 

புத்தளம்  தொடக்கம் கொழும்பு, காலி ஊடாக  ஹம்பாந்தோட்டை  வரையான கடல் பிராந்தியங்கள் இடைக்கிடையே ஓரளவு கொந்தளிப்பான நிலையில் காணப்படும். இக் கடல் பிராந்தியங்களில் கடல் அலையானது 2.0 ‐ 2.5 m உயரத்திற்கு மேலெளக்கூடிய சாத்தியமும்  காணப்படுகின்றது. 

ஆகையினால்  கடலுக்கு செல்லும் மீனவர்களும் கடல்சார் ஊழியர்களும் அவதானத்துடன் கடற்றொழில் நடவடிக்கைகளில்  ஈடுபடுமாறு  கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். 

கலாநிதி மொஹமட் சாலிஹீன்,
சிரேஸ்ட வானிலை அதிகாரி.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.