1952-72 ஆம் ஆண்டு காலப்பகுதியின் பொதுநலவாய நாடுகளின் தலைவியும் இங்கிலாந்து ராணியுமான எலிசபெத் II  காலமானதையடுத்து, அனைத்து பொதுக் கட்டிடங்களிலும் தேசியக் கொடியை அரைக்கம்பத்தில் பறக்கவிடுமாறு பொதுநிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சுக்கு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.

அத்துடன் மகாராணியின் மறைவு குறித்து "பிரித்தானியாவின் அரச குடும்பம், அரசாங்கம் மற்றும் மக்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்” என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

தேசிய துக்க நாள் பின்னர் அறிவிக்கப்படும் என்று ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.