(ஜனூஸ் சம்சுதீன்)

 பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையே நேற்று புதன்கிழமை(செப்டம்பர், 07) நடைபெற்ற ஆசிய கிண்ண Super 4 போட்டியின் போது, ​​ஐ.சி.சி(International Cricket Council) நடத்தை விதிகளின் லெவல் 1 ஐ மீறியதற்காக ஆசிப் அலி மற்றும் பரீத் அகமது ஆகியோர் தண்டிக்கப்பட்டுள்ளனர்.

நேற்றைய விறுவிறுப்பான ஆட்டத்தின் பரீட் அஹமத் வீசிய 19 வது ஓவரின் ஐந்தாவது பந்து வீச்சில் ஆசிப் அலி ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பும் போது,  பரீட்- ஆசிப் அலி இருவருக்கும் இடையே கடுமையான சொற்போர் மூண்டது. 

சர்வதேச கிரிக்கெட் போட்டியின் விதிமுறைகளை அப்பட்டமாக மீறி, விரும்பத்தகாத வாக்குவாதத்தில் ஈடுபட்டமைக்காக ஆசிப் மற்றும் பரீட் ஆகியோர் பெறும் போட்டி கட்டணத்தில் 25% அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ICC தெரிவித்துள்ளது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.