மாயிவெல, மல்சிரிபுர உஸ்வதுல் ஹஸனா கலாசாலையில் இடம்பெற்ற பரிசில் வழங்கும் நிகழ்வு

Rihmy Hakeem
By -
0

 மாயிவெல, மல்சிரிபுர உஸ்வதுல் ஹஸனா கலாசாலையின் 600 வது மாணவர் மன்றத்தினை முன்னிட்டு கடந்த ஒரு வாரகாலமாக நடாத்தப்பட்ட இஸ்லாமிய கலை கலாசார விளையாட்டு மற்றும் கண்காட்சி போட்டிகளில் வெற்றியீட்டியோருக்கு பரிசில்கள் வழங்கும் நிகழ்வு நேற்று 18/09/2022 நடைபெற்றது.

 அதிபர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் ஆத்மீக ஒருமைப்பாட்டு நிருவனத்தலைவரும் அப்துல் மஜீத் அகடமி பணிப்பாளர் அல் ஷேக் அப்துன் நாசர் ரஹ்மானி பிரதம அதீதியாக கலந்துகொண்டார்  நான்கு இல்லங்களுக்கிடையில் நடைபெற்ற போட்டிகளில் ரய்யான் இல்லம் சாம்பியன் ஆனது.

 பிர்தௌஸ் இல்லம், நயீம் இல்லம் மற்றும் அத்தன் இல்லம் முறையே இரண்டாம், மூன்றாம், நான்காம் இடங்களைப்பெற்றது. 

நிகழ்வில் உஸ்தாத்மார்கள் மாணவர்கள் பழைய மாணவர்கள் பெற்றோர்கள் நலன் விரும்பிகள் என பலரும் கலந்து கொண்டனர்.







கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)