கொழும்பு வாழைத்தோட்டத்தில் இடம்பெற்ற வன்முறை தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனிப்பட்ட தகராறு காரணமாக இந்த மோதல் ஏற்ப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தாக்குதலின் போது கூரிய ஆயுதங்களில் தாக்கிய நிலையிலே குறித்த நபர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன் கொழும்பு 12 ஐ சேர்ந்த 43 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளதார்.

இதேவேளை தாக்குதலுக்கு உள்ளான பெண் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தாக்குதல் சம்பவத்தடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் தப்பிச் சென்றுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.