கொழும்பு ஸாஹிறாக் கல்லூரியில் கற்று உயர்ந்தவர்களில் பாக்கீர் மாக்கார் அவர்களும் குறித்து சொல்லப்பட வேண்டிய ஒருவர்.சட்டக் கல்லூரி மாணவராக இருந்தபோது ஸாஹிறாக் கல்லூரி விடுதி ஆசிரியர்களுள் ஒருவராக இருந்து பணி செய்தவர். 1949 இல் சட்டக் கல்லூரியில் சட்டக் கற்கையை முடித்துக்கொண்டு பாக்கீர் மாக்கார் 1949 இல் பேருவலை நகர சபை அங்கத்தவராக, அதன் தலைவராகவெல்லாம் பணி செய்து இருக்கின்றார். 1950 இல் ஐ. தே. கட்சியினூடாக அவரின் அரசியல் பிரவேசம் நிகழ்ந்தது.1960 மார்ச் பொதுத் தேர்தலில் வெற்றியீட்டி 1960 இல் நிகழ்ந்த தேர்தலில் தோல்வியுற்றார்.1965 இல் மீண்டும் வெற்றி பெற்று 1970 இல் தோல்வியடைந்தார். 1977 இல் மீண்டும்  வெற்றியீட்டினார்.

21.9.1978-1986 வரை இலங்கை பாராளுமன்றத்தின் சபாநாயகராக சிறப்பு பணியாற்றிய அவர் ஜனாதிபதியும் பிரதமரும் நாட்டில் இல்லாத சந்தர்ப்பத்தில் இந்நாட்டின் ஜனாதிபதியாகவும் பணி செய்து புகழீட்டினார். 1983 தொடக்கம் 1988 வரை இலாகா இல்லாத அமைச்சராகவும் , 9.6.1988 இருந்து தென்மாகாண ஆளுநராகவும் பணி செய்து புகழ் பூத்த அப்பெருந்தகையின் தமிழுணர்வையும் பங்களிப்பையும் இரை மீட்பதாக இக்கட்டுரை அமைகிறது.

சுவாமி விபுலாநந்தரின் மிக நெருங்கிய நண்பன் பண்டிதர் மு.நல்லதம்பி.

"மனக்கினிய பெருங்குணத்து

நல்ல தம்பிப் பாவலன்"

என்று சுவாமி விபுலாநந்தரினால் புகழ்ந்தோதப்பட்ட பண்டிதர் மு.நல்ல தம்பி, விபுலாநன்தரின் விருப்பத்தின் பேரில் தம் பணியை கொழும்பு ஸாஹிறாக் கல்லூரியில் தொடர்ந்து, புலமையும் தலைமைத்துவப் பண்பும் கொண்ட பலரை தமிழ் கூரு நல்லுலகுக்கு அளித்தவர்.வீ.நல்லையா, பதியுத்தீன் மஹ்மூத், பாக்கீர் மாக்கர், எம்.எல்.ஏ. அபூசாலி, ஏ.ஸி.எம்.அமீர், எம்.ஈ.எச்.முஹம்மதலி,எஸ்.எம்.கமால்தீன்,

எம் எச்.எம்.நெய்னா மரிக்கார்,எம்.ஏ.எம். ஹுசைன்,முஹ்ஸீன்,எம்.எஸ்.எம்.ஹத்தார், எஸ்.எல்.எம்.ஷாபி மரிக்கார்,பேராசிரியர் ஏ.எம்.எம்.மக்கீன், றாசிக் மரிக்கார்,ஐ.எல்.எம்.மஸூர்,எம்.எம்.

இஸ்மாயில்,ஏ.எம்.மேர்ஸா முதலான புகழ் பூத்த ஆளுமைகள் நல்ல தம்பிப் புலவர் ஸாஹிறாவில் கற்பித்த காலத்தில் அவரின் தமிழமுதத்தை பருகியவர்களுட் சிலர்.

பாக்கீர் மாக்கார் ஸாஹிறாக் கல்லூரி ஆளுநர் சபை உறுப்பினராக, அதன் தலைவராக வெல்லாம் பணி செய்தவர்.அவர் ஆளுநர்

சபைத்தலைவராக இருந்தபோது ஸாஹிறாக் கல்லூரியின் உதவி அதிபராக நியமிக்கப்பட்டவன் என்ற வகையிலும் அவருடன் மிக நெருக்கமான தொடர்புகளைப் பேணியவன் என்ற வகையிலும் அப் பெருந்தகையின் தமிழ்ப் பணி பற்றி இக்கட்டுரையினூடு சில தகவல்களைத் தரவிழைகிறேன்.

கொழும்பு ஸாஹிறாக் கல்லூரியில் 'தமிழ் இலக்கிய மன்றம்ஜாயாஅதிபராகவிருந்தகாலத்தில்11.11.1929 இல் தாபிக்கப்பட்டது. இத்தமிழ் இலக்கிய மன்றத்தின் ஆரம்பம் தமிழ் பாரம்பரியம் ஒன்றின் ஆரம்பத்தை இக்கல்லூரியில் ஏற்படுத்திற்று.அதிபர்களான

எ.எம்.எ.அஸீஸ் காலத்திலும் ஷாபி மரிக்கார் காலத்திலும் தொடர்பறாது பேணப்பட்ட  இத்தமிழ்ப் பாரம்பரியம் இன்று வரை நின்று நிலவுகிறது.ஜாயா காலத்தில் ஒவ்வொரு அரையாண்டுக்கும் புதிய நிர்வாகிகளைத் தெரிவு செய்து சிறப்பாகச் செயற்பட்ட இத்தமிழ் இலக்கிய மன்றத்தின் 1939 ஆம் வருட அரையாண்டுக்கான உத்தியோகத்தவர்களாகப் பின்வருவோர் தெளிவாகினர்:தலைவராக பண்டிதர் மு.நல்லதம்பியும்,உப தலைவர்களாக மௌலவிகள் ஹனீப் நத்வி,எம்.இ.அபுல் ஹஸன்,என்.ஜே.நவரத்தினம்,ஏ.ஸி.ஏ.வதூத் ஆகியோரும்,செயலாளராக எஸ்.எம்.கமால் தீனும் தெரிவு செய்யப்பட்ட அம் மன்றத்தின் சபாநாயகராக எம்.ஏ.பாக்கீர் மாக்கார் செயற்பட்டார். எஞ்சிய அரையாண்டிற்கான அவ்விலக்கிய மன்றத்தின் உத்தியோகத்தராகவும் அவர்களே செயற்பட்டனர்.அச்சங்கத்தின் சங்கீத ஆசிரியர்களாக மு.நல்லதம்பி,என்.ஐ.நவரத்தினம்,

மௌலவி அபுல் ஹஸன்,எம்.வை.எம்.பளீல் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.

இத்தமிழ் இலக்கிய  மன்றக்காலத்தில்பாக்கீர்மாக்காரின்தலைமையில்பலநிகழ்ச்சிகள்செயற்படுத்தப்பட்டன. பலவானொலிநிகழ்ச்சிகள்ஒலிபரபாயின. பண்டிதர்நல்லதம்பியின்முயற்சியில்சங்கீதமும் மன்றத்தின் முக்கிய அம்சமாக விருந்தது.புலவர் நல்லதம்பி பாடல்களை எழுதிக் கொடுத்து மாணவர்களை உற்சாகப்படுத்தினார். ‘மங்கையர்என்றமகுடத்தில்ஏ.எம்.கே.குமாரசாமிஅவர்களின்சொற்பொழிவும்19.7.1939 மன்றத்தின் ஏற்பாட்டில் நிகழ்ந்தது. ஸாஹிறாவில் தமிழ் நூல் நிலையம் ஒன்றை ஏற்படுத்துவான் வேண்டி 700 இற்கும் மேற்பட்ட நூல்கள் சேகரிக்கப்பட்டன. நல்லதம்பிப் புலவரின் நண்பன் சட்டத்தரணி என்.எம்.ஹனிபா அவர்களும் இம்முயற்சியில் இலக்கிய மன்றத்துக்கு உதவினார். இவர் முன்னாள் அமைச்சர் எம்.எச்.முகம்மதின் தந்தையார் என்பது அறிதற்குரியது.இக்காலத்திற் றான், அதாவது,1936,37,38 களில் தான்,ஒரு தவணைக்கு எட்டு சொற்பொழிவுகள் வீதம் ‘தமிழ் மொழிபற்றிபுலவர்நல்லதம்பிவானொலியில்உரைகள்நிகழ்த்தினார். பாடசாலைக்கல்விஒலிபரப்பில்புலவரின்இவ்வுரைகள்ஒலிபரபாயின.

லண்டன் மெற்றி குலேசன் பரீட்சைக்கு பாக்கீர் மாக்கார் தமிழையும் ஒரு பாடமாக எடுத்துச் சித்தி பெற்றிருந்தார். அதற்கு அதிபர் ஜாயாவும் புலவர் நல்லதம்பியும் பங்குதாரர்கள். லண்டன் மெற்றி குலேசன் பரீட்சைக்கு தயாராகுவதில் பாக்கீர் மாக்கார் பல சிக்கல்களை எதிர் நோக்கினார். அவர் ஸாஹிறாக் கல்லூரியில் சேர்வதற்கு முன்னர் சென்.செபஸ்தியன் பாடசாலையில் கற்றுக் கொண்டிருந்த ‘தாவரவியல்பாடத்தைக்கற்கஸாஹிறாக்கல்லூரியில்வசதிகள்இருக்கவில்லை. ஒருவருடத்திற்குள்புதியபாடங்களைக்கற்கவேண்டியஇக்கட்டானநிலைக்குபாக்கீர்தள்ளப்பட்டார். கணிதத்திலும்தன்னுடையதரத்தை உயர்த்த வேண்டியிருந்தது. லத்தீன் மொழியையும் புதிதாகக் கற்க வேண்டியிருந்தது. மூன்றாவது பாடமாக எதை எடுப்பதென்பது பாக்கீர் மாக்காரை கவலை கொள்ளச் செய்திருந்தது. பாக்கீரின் இப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் முயற்சியில் அதிபர் ஜாயாவும் களமிறங்கினார். ஸாஹிறாவின் தமிழ்க் கற்பித்தலுக்குப் பொறுப்பாகவிருந்த புலவர் நல்லதம்பியிடம் பாக்கீரை அனுப்பி தமிழை ஒரு பாடமாக ப்பரீட்சைக்கு எடுக்கும் சாத்தியம் பற்றி புலவரின் அபிப்பிராயத்தை அதிபர் கோரினார். பாக்கீரின் தமிழ் மொழி அறிவு லண்டன் மெற்றி குலேசன் பரீட்சைக்குப் போதுமானதாக இருக்கவில்லை. பாக்கீரின் தமிழ் புலமையைப் பரீட்சிப்பான் வேண்டி ‘ஹஜ்ஜுப் பெருநாள்பற்றிஅவரைஒருகட்டுரைஎழுதச்சொன்னார்புலவர். பாக்கீர்எழுதியகட்டுரைபுலவருக்குதிருப்திதரவில்லை. 

சிவப்புநிறப்பென்சிலால்கட்டுரைக்குக்குறுக்கேகோடிட்டு“This boy knows no Tamil and will never learn any” என்று எழுதிய குறிப்புடன் பாக்கீரின் கையிற் கொடுத்து ஜாயாவிடம் அனுப்பி வைத்தார் புலவர். ஆயினும், வேறு வழியேதுமின்றி ஒரேயொரு மார்க்கம் இதுவாகவே தெரிந்ததால்,பாக்கீரைத் தமிழ் வகுப்பில் சேர்த்து முயற்சிக்குமாறு ஜாயா மறுபடியும் வேண்டிக்கொண்டார். அதற்கிணங்க பாக்கீரும் புலவரின் தமிழ் மொழி வகுப்பில் சேர்த்துக் கொள்ளப்பட்டார்.பாக்கீரின் அயராத ஊக்கம் புலவரின் கடும் முயற்சியில் பாக்கீருக்கு வெற்றியைக் கொடுத்தது. பாக்கீர் லண்டன் மெற்ரி குலேஷன் பரீட்சையில் தமிழிலும் சித்தி பெற்றார். தன்னுடைய முயற்சியில் வெளிவந்த ‘Crescent - 1939’ ஐ அதிபர் ஜாயாவுக்குக் கையளிக்கச் சென்ற பாக்கீருக்கு அவர் லண்டன் மெற்றி குலேசன் பரீட்சையில் சித்தி அடைந்த நற்செய்தியை ஜாயா எத்தி வைத்து மகிழ்ச்சி தெரிவித்தமை பாக்கீரின் வாழ்வில் முக்கிய நிகழ்வாயிற்று.

பாக்கீர் தோல்வியடைந்த முதலாவது தேர்தலில் அவரின் வெற்றியை நாடி நின்றவர்களில் அவரின் தமிழ்ப் பேராசான் மு.நல்ல தம்பியும் ஒருவர். கடும் முயற்சி செய்து தமிழ் கற்பித்து உருவாக்கிய தன்னுடைய மாணவன் பாக்கீர் மாக்கார் பற்றி கவிதையொன்றையும் யாத்து பேருவலை மக்களின் நாவுகளில் தவிழ விட்டார் நல்லதம்பிப் புலவர்.இன்றும் கூட பேருவலை ஊரின் முதியவர்களின் நாவுகளில் தவழும் அப்பாடல் கீழே தரப்படுகிறது:

 

கீர்த்தி மலிந்திட்ட வேர்வலை மாநகர்

சீர் மருதானையில் உள்ளவர் பார் -  கல்வி

பார்த்து நகரசபைக் கெங்கள் பாக்கீர்

பயனுடையாரென்றனிப்பிடுவோம்.

 

சிங்களம்,ஆங்கிலம்,செந்தமிழ் மூன்றையும்

சிங்கமெனச் சபை  மீதெழுந்து - பாக்கீர்

தங்கு தடையின்றி  வீரம்செறிந்திடச்

சாற்ற வல்லா ரென்றனுப்பிடுவீர்.

 

அகில இலங்கை இஸ்லாமிய மாணவர்

அமைப்பின் இயக்கத்தலைவர் கண்டீர்-பாக்கீர்

சீர் நாமமேலோங்கியே சாதி சிறப்புறச் செய்திடும் உத்தமத் தொண்டர் கண்டீர்.

 

வெள்ளத்திலே அள்ளுப்பட்ட சனங்களை

மீட்டிங்கு காத்து மேல் பார்த்தவர் யார் - பாக்கீர்

உள்ளத்திலே கள்ளம்மில்லாமல் சேவை உகந்து

புரிவோர் தெரிந்திடுவோம்.

 

பாராளுமன்றத்தில் ஏறி இருந்து  

பணிகழாற்றவும் வல்லார் கண்டீர் - பாக்கீர்

தாராள மனதுடன் சேவை செய் தென்றுமே

பணிவாக நடந்திடும் பண்பு கண்டீர்.

 

 

வண்டிச்சக்கரமாம் அடையாளத்தை

மாறின்றி எங்கள் மனதில் வைத்தே - பாக்கீர் 

கொண்டிடும் சக்கரம் பக்கத்தின் புள்ளடி

கூடிச்சென்றெல்லோரும் போட்டிடுவோம்.

என்றமைத்த முதுதமிழ்ப்புலவர் நல்லதம்பி அவர்கள் பாக்கீரின் தேர்தல் வெற்றிக்காக பாடிய பாடல் வரிகளை, இலங்கையின் சுதந்திரப் பேற்றையொட்டி நிகழ்ந்த நாடு தழுவிய கவிதைப்போட்டியில் சோமசுந்தரப் புலவர் உள்ளிட்ட 58 புலவர்களைப்புறந்தள்ளி பரிசில்வென்றஅவரின்பாக்கீர் மீதான மேற் பாடலை, தேசிய கீதத்தைத்தமிழாக்கித் தந்த அப்பெரும்புலவர் பாக்கீர் மீது பாடிய அப்பாடல் வரிகளை நாமும் பாட வேண்டும் போற்தோன்றுகிறது.

பாராளுமன்றத்தில் ஏறி இருந்து  

பணிகளாற்றவும் வல்லார்

என்ற நல்லதம்பி புலவரின் பாடல்கள் மக்கள் மதிப்பீட்டிலும் சரியாகப்பட்டதனாற்றான் பாக்கீர் பாராளுமன்றம் சென்றார்;சபாநாயகரனார்;அமைச்சரானார்ஆளுநரானார்;சிலகாலம் பதில் ஜனாதிபதியுமானார்.

காஸிம் மௌலவியின் சூறத்துல் பாத்திஹா தமிழ் மொழிபெயர்ப்பு( தப்ஸீர்) வெளியீட்டு நிகழ்வு 2.12.1980 இல் சபாநாயகரின் வாசஸ்தலமான மும்தாஜ் மஹாலில் நிகழ்ந்தபோது சபாநாயகர் பாக்கீர் மாக்கார், டாக்டர் எம். ஸி. எம்.கலீல், அமைச்சர் எம்.எச். முஹம்மத் ஆகியோர் கலந்து கொண்டு உரைகள் நிகழ்த்தினர்.சாஹிறாக் கல்லூரி இஸ்லாமியக் கலாசார நிலையத்தின் ஏற்பாட்டில்  நடைபெற்றஇந்நிகழ்வில்அதன்தலைவர்ஷாபிமரிக்கார் வரவேற்புரையையும் செயலாளர் என்ற வகையில் நான் நன்றி உரையும் நிகழ்த்தினோம்.இந்நிகழ்வின் போது எம்.ஈ.எச்.மஹ்ரூப்( பா. உ.), டாக்டர் எம்.ஏ.எம். ஜலால்தீன்( பா. உ.), ஏ.அஸீஸ், உயர் நீதிமன்ற நீதிபதி ஏ.எம்.அப்துல் காதர் உள்ளிட்ட பலர் பிரசன்னமாயிருந்தனர்.

மருதானை ஐக்கிய போதனா கழகத்தின் பரிசளிப்பு விழா 24.4.1986 இல் நிகழ்ந்த போது பாக்கீர் மாக்கார் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்.

எழுத்தாளர் புன்னியாமினின் “இலக்கிய உலா, “அடிவானத்து ஒளிர்வுகள்“இலக்கியவிருந்துஆகியமூன்றுநூல்களின்வெளியீடு6.12.1987 இல் ரண்முத்து ஹோட்டலில் நிகழ்ந்தபோது அந்நிகழ்விற்கு பாக்கீர் மாக்கார் தலைமை தாங்கினார்.நானும் பங்கு கொண்டு உரையாற்றிய இந்நிகழ்வில் அமைச்சர் இராசதுரையின் சொற்பொழிவும் இடம்பெற்றது.

நிதானிதாசன், பிரோட்வே ஹில்மி ஆகியோரின் இணைந்த படைப்பாக வெளிவந்த “கன்னி மொட்டுகள் நூல் வெளியீடும் பாக்கீர் மாக்கார் இன் தலைமையிற்றான் 10.3.1988 இல் நிகழ்ந்தது.அமைச்சர் இராசதுரை பிரதம அதிதியாகக் கலந்துகொண்ட இந்நிகழ்வில் என்னுடைய சொற்பொழிவும் இடம்பெற்றது.

கொழும்புத் தமிழ் சங்கத்தில் 8.8.1988 இல் சங்கத் தலைவர் வ.மு.தியாகராஜாவின் தலைமையில் பாரத விழா கொண்டாடப்பட்ட போது தென்மாகாண ஆளுநராகவிருந்த பாக்கீர் மாக்காரும், பிரதேச அபிவிருத்தி அமைச்சராக இருந்த செ.இராசதுரையும் கலந்து கொண்டு சொற்பொழிவுகள் நிகழ்த்தினர். இருவரும் மிக நெருங்கிய நண்பர்கள். இவர்களின் நட்புக்கும் தமிழ் விவகார உதவிப் பணிப்பாளராக  நான்இராசதுரையின்அமைச்சில்நியமனம்பெற்றதற்கும்சம்பந்தமிருக்கிறது. இவ்வைபவத்தில்நானும்கலந்துகொண்டுஉரைநிகழ்த்தினேன்.எஸ்.எம்.சஹாப்தீன்நிழற்படத்திரைநீக்கமும்,எஸ்.எம்.ஹனீபாவின் “மகா கவி பாரதிநூல்வெளியீடும்இதேவைபவத்தில்நிகழ்ந்தன.எஸ்.எம்.சஹாப்தீன் நிழற்படத்தைத்திரை நீக்கம் செய்துவிட்டு உரை நிகழ்த்திய பாக்கீர் மாக்கார் பின்வருமாறு கூறினார்:

தமிழ் மொழிக்கென்று, தமிழ் இலக்கியத்திற்கென்று, ஏன்! தமிழ் இனத்திற்கென்றே போராடி, புரட்சிக் கவிதைகளைப் பாடிய பாரதியின் நினைவு தினத்தில் ஓர் இலக்கிய தொண்டனின் உருவப் படத்தைத் திரை நீக்கம் செய்து வைப்பது சாலப் பொருந்தும்.மொழியால் தமிழனாகவும், இனத்தால் முஸ்லிமாகவும், தேசத்தால் இலங்கையனாகவுமிருந்த எஸ்.எம்.சஹாப்தீன் அவர்களின் இலக்கியச் சேவைகளைப் பற்றி புத்தகம் புத்தகமாக எழுதலாம்.

எனக்குச் சென்னை மக்களைப் பற்றி அவ்வளவு தெரியாது, அதே போல் அவர்களுக்கும் என்னைப் பற்றித் தெரியாது. அப்படியான ஒரு காலகட்டத்தில் 1979 இல் இலங்கையில் ஓர் இஸ்லாமிய இலக்கிய மாநாட்டைக் கூட்டி அதற்குத் என்னை தலைமை பொறுப்பை ஏற்க செய்து,அதை வெற்றிகரமாக முடிவடையச் செய்தார். அதேபோன்று என்னை அங்கு வரவழைத்து ஒரு பெரிய விழாவினையே குலசேகர பட்டினத்தில் நடத்தி அங்குள்ள மக்களுக்கு என்னை அறிமுகம் செய்து வைத்தார். இவை அனைத்தும் இன்றும் என் மனதில் மங்காத நினைவாக இருந்து கொண்டிருக்கிறது. சுமார் 30 ஆண்டு காலமாக தமிழர்கள் செறிந்து வாழும் கொழும்புப் புறக்கோட்டை செட்டியார் தெருவில் மீலாத் விழாக்களை நடத்தி தமிழ்நாட்டு அறிஞர்களை வரவழைத்து தமிழுக்கும் இஸ்லாத்துக்கும் அரும்பணியாற்றிய பிரிதொரு முஸ்லிம் மகனை நாம் எமது சமகாலத்தில் கண்டறியோம்.

நபிகளாரின் போதனைகளை நம் நாட்டுத் தமிழ் பெருங்குடி மக்கள் அறிந்து கொள்ளும் வண்ணம் பொதுக்கூட்டங்களை நடத்தி வரலாறு படைத்தவர் அவர். போதனைகளுக்கு மாத்திரம் மேடைகளை பாவிக்காது ஏழை மாணவர்களுக்குப் புலமைப் பரிசில்களை அளிக்கும் விழாக்களுக்கும் பயன்படுத்தி புதுமையை ஏற்படுத்திய பெருமை சஹாப்தீனைச் சாரும். (தினகரன்14.9.1988)

என்று அவ்வைபவத்தில் கூறி பாக்கீர் அமர்ந்த போது நான் கண்கலங்கிப் போனேன். அவரின் அழகு தமிழுரை என்னைக் கவர்ந்தது. “இவ்வளவு அழகாக இலக்கணம் சற்றும் வழுவாது தமிழ் பேசுகிறீர்களேஎன்றுநான்அவரிடம்தெரிவித்தபோது, அதற்குப் பதிலளித்தவர், “நஹியா, பண்டிதர் நல்லதம்பியிடம் தமிழ் படித்தவன் நான்என்றுஇறுமாப்புடன்விடைபகர்ந்தார். தன்னுடையதமிழ்குருநல்லதம்பிமீதுஅவர்வைத்திருந்தபற்றையும்பாசத்தையும்அன்றுதான்நான்உணர்ந்தேன்.

என்னுடைய ‘அஸீஸும் தமிழும்நூல்வெளியீடுகொழும்புஸாஹிறாக்கல்லூரியில்20.7.1991 இல் நிகழ்ந்த போது தென்மாகாண ஆளுநராக அப்போது பதவி வகித்த பாக்கீரும் கலந்து கொண்டு சொற்பொழிவாற்றினார். அமைச்சர் மன்சூரும் பாக்கீரும்  ஒருவருக்கொருவர்நூலைவழங்கிஅந்நூலைவெளியிட்டுவைத்தமையும்என்மனக்கண்முன்இன்றும்நிழலாகின்றது.

மலேசியாவில் 1989 இல் நிகழ்ந்த அனைத்துலகத் தமிழராய்ச்சி மாநாட்டில் கலந்து கொண்ட பாக்கீர் மாக்கார்,  1979 ஐ ஜூன் 29,30, ஜுலை 01 ஆம் திகதிகளில் இலங்கையில் நிகழந்த நான்காவது அனைத்துலக இஸ்லாமிய தமிழாராய்ச்சி மாநாட்டின் ஏற்பாட்டு குழுத் தலைவராகவும் செயற்பட்டதை நினைக்கும் போது அவரின் நிழலாய் நின்ற புலவர் நல்ல தம்பியை நினைத்து கொண்டேன்.

பாக்கீர் மாக்காரின் ஆளுமை விருத்திக்கும், உயர்ந்தவற்றை நோக்கி உழைக்கும் பண்புக்கும் ஸாஹிறாவும் ஜாயாவும் காரணமாகின்றனர். (வீரகேசரி 10.9.2001).

என்ற பேராசிரியர் கா.சிவத்தம்பியின் கூற்று மிக்க அர்த்தபுஷ்டியுள்ளதாகவே எனக்குத் தெரிகிறது.அந்த வகையில் பாக்கீர் மாக்காரின் ஆளுமை விருத்தியில் ஸாஹிறாவும், ஜாயாவும் மட்டுமன்றி நல்ல தம்பிக்கும் அப்போது ஸாஹிராவில் நிலவிய தமிழ்ச் சூழலுக்கும் முக்கிய பங்கிருக்கிறது. அதிபர் ஜாயாவின் தேசிய சிந்தனையும் ஆசிரியர் தம்புவின் பொதுவுடமை கருத்துக்களும் பாக்கீரின் ஆளுமை விருத்தியில் தாக்கம் செலுத்தின.அதனாற்றான் நேர்மையான அரசியல்வாதியாக சிங்கள,தமிழ்,முஸ்லிம் ஐக்கியத்தின் ஆதர்சமாக பாக்கீர் மாக்காரினால் பிரகாசிக்க முடிந்தது.

ஏ எம் நஹியா B.A (Cey), P.G.D.E (U O Jaffna), M.Phil in Edu, (U.O.Jaffna) Cert.in Gen.Mgt.(SLIDA)

முன்னாள் பணிப்பாளர் நாயகம்-புனர்வாழ்வு;மீனவர் வீடமைப்பு மற்றும் மீனவர நலன், முன்னாள் அரச  சேவைகள் ஆணைக்குழு அங்கத்தவர்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.