வடக்கிலும் கிழக்கிலும்  ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியை பலப்படுத்த விரும்புவர்கள் தம்மை தொடர்பு கொள்ளவும் என்று ஸ்ரீலங்கா ஐக்கிய முன்னணி கட்சி தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் அக்கட்சி விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,

குறிப்பாக வட கிழக்கிலுள்ள மகளிர் அமைப்புக்களுக்கு எமது கோரிக்கைக்கு இணங்க அரசினால் வாழ்வாதார உதவிகளும் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதேபோன்று கெளரவ ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாகுவதற்கு முன்பே முதல் முதலாக தொடர்புகளை வைத்துக்கொண்ட பங்காளிக் கட்சி எமது ஸ்ரீலங்கா ஐக்கிய முன்னணி கட்சி ஐக்கிய தேசியக் கட்சி தலைமை காரியாலயமான சிரிக்கொத்தாவில் பெயரிடப்பட்டுள்ளது என்பதை நினைத்து பெருமை அடைகின்றோம். 

அதேபோன்று ஜனாதிபதி செயலகத்திலும் முதல் முதலாக ஜனாதிபதிக்கு வாழ்த்து தெரிவித்தது நமது கட்சி என்பதில் மகிழ்ச்சி அடைகின்றோம் எனவே நாட்டைக் கட்டி எழுப்ப நினைக்கும் அனைவரும் எம்மோடு கைகோர்க்கலாம். பிரதேச அமைப்புக்கள் மகளிர் அமைப்புகள், மற்றும் தொழில் சார் அமைப்புகள், இளைஞர் யுவதிகள் ,இளைஞர் அமைப்புகள் ,சமூகத் தொண்டு நிறுவனங்கள் போன்ற அனைத்து அமைப்புகளும் தமிழ் ,முஸ்லிம், சிங்களம் ,மலே என்று பாராமல் அனைத்து இன மக்களும் எம்மை தொடர்பு கொள்ளவும்.

 தொடர்புகளுக்கு :

சித்தீக் முஹம்மத் சதீக், தலைவர், ஸ்ரீலங்கா ஐக்கிய முன்னணி கட்சி - 0710782828/0778232828

சல்மான் வஹாப், செயலாளர், ஸ்ரீலங்கா ஐக்கிய முன்னணி கட்சி - 0773233872 

ஜவுஸ் பழீல், தேசிய அமைப்பாளர், ஸ்ரீலங்கா ஐக்கிய முன்னணி கட்சி - 0763038418 

(குறிப்பு - வட கிழக்கை ஒருங்கிணைப்பு செய்ய ஐக்கிய தேசியக் கட்சியின் பங்காளி கட்சிகளுக்கான ஒருங்கிணைப்பாளரினால் ஸ்ரீலங்கா ஐக்கிய முன்னணி கட்சிக்கு திறந்த அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.