(அஷ்ரப் ஏ சமத்)

இந் நாட்டில் நல்லிணக்கத்தையும் அமைதியையும் ஏற்படுத்துவதற்கு  எல்லா சமூகங்களுக்கிடையே ஒர் புரிந்துணர்வையும் ஏற்படுத்துதல் வேண்டும். அத்துடன்  பெரும்பான்மையின மக்கள் சிறுபான்மை மக்களுக்கு  எதிராகக்  கொண்டுள்ள அல்லது வேண்டுமென்றே இனரீதியாகச்  செய்கின்ற எல்லாக் காரியங்களும் உடன்  நிறுத்தப்படல் வேண்டும் என கலாநிதி ஜெஹான் பெரேரா தெரிவித்தாா்.

இலங்கையின் இனப்பிரச்சினைகள் விடயத்தில் பலமுன்மொழிவுகளைச் செய்து வருகின்ற புத்திஜீவியும்,  தேசிய சமாதானப் பேரவையின் தலைவா் கலாநிதி ஜெஹான் பெரோ நேற்று திங்கட் கிழமை அக்டோபா் 03 முன்னைய ஆணைக்குழுவின் அறிக்கைகளை ஆராயும் ஜனாதிபதிக் கமிசன் தலைவா் உயா் நீதிமன்ற நீதியரசா் திலிப் நாவஸ் தலைமையில் பண்டாரநாய்கக சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் துலிப் அரையில் கூடியது. இவ் ஆணைக்குழு முன் தோன்றி கலாநிதி ஜெஹான் பெரோ கருத்துத் தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு  தெரிவித்தாா்..

இவ் ஆணைக்குழுவில் ஏனைய அங்கத்தவா்களான முன்னாள் ்பொலிஸ்் மா அதிபா் சந்திரா பெர்ணான்டோ,யாழ்ப்பாண முன்னாள் மேயர்  லோகேஸ்வரி பத்மநாதன், முன்னாள் அரச அதிபா் நிமல் அபேரத்தினவும்  மற்றும் சட்டத்திணைக்கள அலுவலகர்  ஒருவரும் அங்கு சமுகமளித்திருந்தனா்.

அவா் தொடா்ந்து அங்கு ஆணைக்குழு முன் கருத்துத் தெரிவிக்கையில்,

இலங்கையில்  உண்மையை கண்டறியும் ஆணைக்குழுவின் சிபாா்சுகளை இந்த ஆணைக்குழு பரிந்துரைக்கு முன்வருமானால் அதனைத் தான் வரவேற்பவதாகக் குறிப்பிட்டாா். அப்படியானதொரு கட்டமைப்பினை நிறுவுவதற்கு எல்லா மக்களது அங்கிகாரத்தினையும் சம்மத்தினையும் பெறல்  வேண்டும். தென்ஆபிரிக்காவில் இன்பிரச்சினைக்குத் தீர்வுகள் மற்றம் விசாரணைகள் திறந்த வெளியரங்கில் அதனை அந்த நாட்டில் ்வாழும் சகல மக்களும் அறியக் கூடியதாகவே நேரடியாகத் தொலைக்காட்சி மூலம் அறியப்படுத்தப்பட்டு வந்த முறைமை   இலங்கையிலும்  அறிமுகப்படுத்தப்படல் வேண்டும். நமது நாட்டில் நடைபெறுகின்ற சகல ஆணைக்குழுவின்  சாட்சியங்கள் மூடிய அரையில் வைத்தே நடைபெறுகின்றது. இம்முறைமை மாற்றப்படல்  வேண்டும். எனவும் ஜெஹான் பெரேரா தெரிவித்தாா்.

தொடாந்து அவா் கருத்து தெரிவிக்கையில், 

தென் ஆபிரிக்காவில்  உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு செய்தது போன்று எல்லாக் கட்சியினரும் இதற்கு ஆதரவு வழங்கப்படல் வேண்டும். அத்தோடு மக்கள் இது என்ன நோக்கத்தில் உருவாக்கப்படுகின்றதோ அந் நோக்கத்திலும் ஒரு புரிந்துணா்வினை ஏற்படுத்துதல் வேண்டும்.  புலம் பெயா்ந்த தமிழா்களும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பும் ஒன்றாகக் கலந்துரையாடப்பட்டு அவா்களின் நல்லிணக்கத்துடன்  இந்த நாட்டில் சமாதானத்தையும் புரிந்துணா்விணையும் ஏற்படுத்துதல்  வேண்டும். என்றும்  அவா் அங்கு  கூறியதோடு அதிகாரப் பரவலாக்கல் உடனடியாக நிறைவேற்றப்டல் வேண்டும். 

ஜக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் 47 நாடுகள் அங்கத்துவம் வகிக்கின்றன. அதில் கடந்த ஆண்டு இலங்கைக்கு சாா்பாகா 11 நாடுகள் ஆதரவு தெரிவித்தன இம்முறை 6 நாடுகளே ஆதரவு தெரிவிக்க உள்ளதாக ஊடகங்களில் செய்தி வெளிவந்துள்ளன.. இவ்வாறு எமது நாடு பொருளாதார நெறுக்கடியில் சிக்கித் தவிக்கும் காலகட்டத்தில்  மீளவும் நாம் பின்நோக்கிச்   செல்ல வேண்டி ஏற்படும். எமது நாடு பற்றி சர்வதேச மட்டத்தில் பிழையான பின்னடைவுகளை நாம்  எதிா்நோக்கலாம்.உதவி வழங்கும் நாடுகள் பின்னடையாலாம்.  கடந்த காலததில் சில அரசியல் வாதிகள் இனரீதியாக செயல்பட்டதானாலேயே இவ்வாறதொரு நிலைமைக்கும்   பிரச்சினைகளும் எமது நாட்டில்  மேலோங்கின.  

இந்த நாட்டில் ஆட்சிக்கு வந்த பல அரசியல் தலைமைகள் கடந்த 25 வருட காலகமாக பல ஆணைக்குழுக்கள் நியமிக்கப்பட்டன.அந்த ஆணைக்குழுக்கள் முன்னெடுக்கப்பட்ட பரிந்துரைகளை கிடக்கில் போடப்பட்டன். அவைகள் இனவாதமாக சில கட்சிகள் அதனை துாக்கிப் பிடிப்பதனால் அவ் அறிக்கைகள் காணமால் போகிவிட்டன.   இந்த நாட்டின் தேசிய கீதத்தினைக் கூட தமிழ் மொழியில் சிறுபான்மை மக்கள் கேட்பதற்கும்  பாடுவதற்கும்  தடை விதித்தாா்கள்.

. இந்த நாட்டில் உள்ள பிரதான  அரசியல் கட்சிகள் இணைந்து இந்த நாட்டில் வாழும் தமிழ் முஸலிம் மற்றும் மலையக மக்களது அதிகாரப் பரவலாக்கல் போன்ற பிரச்சினைகளையும்  அவா்களுக்குரிய உரிமைகளையும்  கலந்தாலோசித்து வழங்கப்படல் வேண்டும் எனவும் ஜெஹான் பெரோரா அங்கு தெரிவித்தாா்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.