கம்பஹா மாவட்ட முஸ்லிம் பாடசாலை மாணவர்களிடத்தில் ஊடக அறிவினை மேம்படுத்தும் நோக்கில் ஊடகக் கருத்தரங்கொன்றினை நடாத்தி  ஊடக கழகங்களை உருவாக்கும் செயற்றிட்டம் ஒன்றினை சியன  ஊடக வட்டம் முன்னெடுக்கவுள்ளது. 


இதன் முதற்கட்டமாக 29.10.2022 சனிக்கிழமை மினுவங்கொடை அல் அமான்  மகாவித்தியாலயத்தில் இக்கருத்தரங்கு தொகுதியின் ஆரம்ப கருத்தரங்கு இடம்பெற உள்ளது. பாடசாலை அதிபர் M.T.M. ஆஸிம் தலைமையில் ஆரம்ப அமர்வு முற்பகல் 9 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. சியன ஊடக வட்ட அறிமுகமும் அனுபவப்பகிர்வும் என்ற தலைப்பில்  அதன் தலைவர் சிரேஷ்ட ஊடகவியலாளர் M.Z. அஹமட் முனவ்வர்  உரையாற்றவுள்ளார். 

இரண்டாவது அமர்வில் சிரேஷ்ட ஊடகவியலாளர்களான S.A.M. பவாஸ், பியாஸ் முஹம்மட், ரிஹ்மி ஹக்கீம், பஸ்ஹான் நவாஸ் ஆகியோர் பல்வேறு தலைப்புகளில் விரிவுரையாற்றவுள்ளனர்.

விரிவுரைகளைத் தொடர்ந்து  மாணவர்களிடையே எழுத்து பரீட்சையொன்று நடத்தப்பட்டு ஊடகக் கழகத்திற்கான மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். மூன்றாவது கட்டமாக இடம்பெறவுள்ள சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்வதுடன் மாணவர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கப்பட உள்ளன.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.