திவுரும்பொல மனாருல் ஹுதா பழைய மாணவர் அமைப்பின் கட்டார் கிளையின் ஏற்பாட்டில் நடைபெற்ற கருத்தரங்கு

Rihmy Hakeem
By -
0

- ஷாம் மௌலானா -

திவுரும்பொல மனாருல் ஹுதா பழைய மாணவர் அமைப்பின் கட்டார் கிளை மாதாந்தம் நடாத்தி வரும் கருத்தரங்கு தொடரின் இம்மாத அமர்வு கடந்த 09 ம் திகதி மர்ஹும் அஷ்ஷேக் ஹலாலுத்தீன் மிஸ்பாஹி ஞாபகார்த்த மண்டபத்தில் நடைபெற்றது.

அதிபர் மௌலவி அஹ்மத் ஹலாலுதீன் மிஸ்பாஹி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிக்ஹ் கலை என்றால் என்ன? அது ஏன்? எப்படி ?என்ற தலைப்பில் புத்தளம் அப்துல் மஜீத் அகடமி இஸ்தாபகரும் ஆத்மீக ஒருமைப்பாட்டு நிருவனத் தலைவருமான அஷ்ஷேக் அப்துன் நாசர் ரஹ்மானி பிரதம வளவாளராக கலந்துகொண்டு நடாத்தி வைத்தார் நிகழ்வில் பழைய மாணவரான மௌலவி முத்தஸ்ஸிர் மனாரி அர்கள் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) சுன்னாக்களின் மாண்புகள் எனும் தலைப்பில் உரையாற்றினார்.

கல்லூரி உஸ்தாதுமார்கள் மாணவர்கள் பழைய மாணவர்கள்  என பலரும் கலந்து கொண்டு பயன் பெற்றனர் உஸ்தாத் ஸாகிர் பாருக் இஹ்சானி  அவர்கள் கட்டார் வாழ் மனாரியீன்களுக்கு நன்றி தெரிவித்து உரையாற்றினார்.






கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)