மலேசியாவின் முன்னாள் பிரதமர் மகாதீர் மொஹமட் 53 வருடங்களுக்கு பின்னர் தேர்தலில் தோல்வியடைந்துள்ளார்.

நேற்று (நவ.19) இடம்பெற்ற அந்நாட்டு பொதுத் தேர்தலில் அவர் 8 சதவீதத்திற்கும் குறைவான வாக்குகளை பெற்று  படுதோல்வியடைந்ததை தொடர்ந்து, கட்டுப்பணத்தையும் இழந்துள்ளார்.

97 வயதான மகாதீர் மொஹமட்டின் கட்சியால் எந்த ஒரு பாராளுமன்ற தொகுதியையும் கைப்பற்ற முடியவில்லை.

1981 முதல் 2003 வரை 22 ஆண்டுகள் மலேசியாவின் பிரதமராக இருந்த மகாதீர் மொஹமட், 2018 ஆம் ஆண்டு உலகின் மிகவும் வயதான பிரதமராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அப்போது 93 வயதாக இருந்த மகாதீர் மொஹமட், சில மாதங்களுக்குப் பிறகு பிரதமர் பதவியை இராஜினாமா செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.