’21ஆம் நூற்றாண்டில் ஊடகம்’ என்ற தொனிப்பொருளில் பாடசாலை மாணவர்களுக்காக நடாத்தப்படுகின்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் 71 ஆவது ஊடகக் கருத்தரங்கு நாளை (7) திங்கட்கிழமை காலை 9 மணி முதல் முழு நாள் கருத்தரங்காக கொழும்பு அல் – ஹிக்மா கல்லூரியில் நடைபெறும்.

அமைப்பின் தலைவி புர்கான் பீ. இப்திகார் தலைமையில் நடைபெறும் இவ் ஊடகக் கருத்தரங்கில், முஸ்லிம் மீடியா போரத்தின் முக்கியஸ்தர்களான முன்னாள் தலைவரும் சிரேஷ்ட ஊடகவியலாளருமான என்.எம்.அமீன், தாஹா முஸம்மில், எம்.ஏ.எம்.நிலாம், ஜெம்ஸித் அஸீஸ், ஜாவிட் முனவ்வர், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன தமிழ் செய்தி – உதவிப் பணிப்பாளர் ஜுனைட் எம். ஹாரிஸ், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன முஸ்லிம் சேவையின் தயாரிப்பாளரும் ஊடக பயிற்றுவிப்பாளருமான இஸ்பஹான் சாப்தீன் ஆகியோர் விரிவுரைகளை நடாத்தவுள்ளனர் என போரத்தின் பொதுச் செயலாளர் சிஹார் அனீஸ் தெரிவித்தார்.

கல்லூரி அதிபர் முல்லை முஸ்ரிபாவின் ஏற்பாட்டில்,
நடைபெறும் இக்கருத்தரங்கில், சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் மொழித்துறை தவசிப் பேராசிரியர் ரமீஸ் அப்துல்லாஹ் பிரதம அதிதியாகவும் இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் அரசியல் விவகாரப் பொறுப்பாளர் பானூ பிரகாஷ் மற்றும் தினகரன் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் செந்தில் வேலவர் ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும் கலந்து கொள்ளவுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

எம்.எஸ்.எம்.ஸாகிர், (செயலாளர், முஸ்லிம் மீடியா போரம்)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.