ஓட்டமாவடி - மஜ்மா நகரில் யானை தாக்கி வயோதிபர் மரணம்
யானை தாக்கி நபரொருவர் மரணமடைந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.
இச் சம்பவம் ஓட்டமாவடி - மஜ்மா நகர் பகுதியில் வைத்து (25) காலை இடம்பெற்றுள்ளது.
ஓட்டமாவடி - மீராவோடை பகுதியைச் சேர்ந்த 74 வயதுடைய 5 பிள்ளைகளின் தந்தையான எஸ். எம். காசிம் என்பவர் மஜ்மா நகரிலுள்ள அவரது தோட்டத்திற்கு சென்ற போதே அவர் யானை தாக்கி மரணமடைந்துள்ளார்.
இவ்வாறு மரணமடைந்த நபரின் உடல் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.