பாடசாலை ஆய்வு கூடத்தில் இரசாயன கசிவு - 5 மாணவர்களும் 03 ஆசிரியர்களும் வைத்தியசாலையில் அனுமதி

  Fayasa Fasil
By -
0




புஸ்ஸல்லாவ சரஸ்வதி மத்திய கல்லூரியில் கல்விப் பயிலும் உயர்தர விஞ்ஞான மாணவர்கள் இன்று (21) காலை பாடசாலையின் விஞ்ஞான ஆய்வுக் கூடத்தில் பரிசோதனை ஒன்றினை மேற்கொண்டிருந்தனர். இதன்போது, Bromin (புரோமின்) என்ற இரசாயன குவளை உடைந்ததன் காரணமாக இரசாயனம் ஆய்வுக்கூடம் முழுவதும் பரவியுள்ளது.
இதனால் அங்கிருந்த ஐந்து மாணவர்களும் மூன்று ஆசிரியர்களும் பாதிப்புக்கு உள்ளாகி மூச்சுத் தினறல் காரணமாக புஸ்ஸல்லாவ வகுக்கப்பட்டிய வைத்தியசாலை அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நிலமையினை கட்டுப்பாட்டு கொண்டு வரும் நோக்கில் கண்டி தீயணைக்கும் பிரிவினர் பாடசாலைக்கு விரைந்துள்ள அதே நேரம் இரசாயனத்தை அப்புறப்படுத்தும் செயல்பாடுகளில் ஈடுபட்டுள்ளனர். 

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)