சுதத்.எச்.எம்.ஹேவா


சிவனொளிபாதமலைக்கு  யாத்திரைச் சென்ற இளைஞர் ஒருவர், திடீர் சுகயீனமடைந்து, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார் என நல்லதண்ணிய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி.  வீரசேகர தெரிவித்துள்ளார்.

இன்று  திகதி காலை கந்தகெட்டிய பிரதேசத்தில் இருந்து சிலருடன் சிவனொளிபாதமலைக்கு வருகைத் தந்த 23 வயதான குறித்த இளைஞர்,  அதிகாலை சுகயீனமடைந்து  மஸ்கெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின், உயிரிழந்துள்ளார்.

கந்தகெட்டிய-  மீகஹகிவுல, கரமட்டிய பகுதியைச் சேர்ந்த 23 வயதான கே. எம். ஜனித் காவிந்த இவ்வாறு உயிரிழந்துள்ளதாகவும், பிரேத பரிசோதனைக்காக சடலம் டிக்கோயா-  கிளங்கன் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Tamilmirror 

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.