குற்றியாடி சிறாஜுல் ஹுதா அரபிக் கல்லூரியில் +2 உடன் 2005 முதல் 2012வரை மார்க்க கல்வி பயின்று சுரைஜி ஸனது பெற்றார்.
சிறாஜுல் ஹுதா அரபிக் கல்லூரியில் ஏற்பட்ட கல்வித்தாகம் அவரை அடுத்த கட்டத்துக்கு கொண்டு சென்றது.
கோழிக்கோடு பல்கலைக்கழகத்தில் பி.ஏ.ஆங்கில இலக்கியம், சென்னை பல்கலைக்கழகத்திலிருந்து எம்.ஏ.ஆங்கில இலக்கியமும் தேறியவர் காரந்தூர் மர்க்கஸ் சட்டக்கல்லூரியில் சேர்ந்து ஸகாஃபி ஸனதுடன் எல்.எல்.பி முடித்த அப்துல் ராசிக் மீண்டும் திருப்பதி பல்கலைக்கழகத்தில் சேர்ந்து எல்.எல்.எம் தேர்ச்சி பெற்றார்.
தற்போது வடகரா நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வரும் நிலையில் சமீபத்தில் கேரள மாநில அரசு நடத்திய முன்ஷிஃப் பதவிக்கான ஜுடிசியல் தேர்வு எழுதினார்.
இரண்டு தினங்களுக்கு முன் வெளியான தேர்வு முடிவுகளில் அப்துல் ராசிக் 28வது இடத்தில் தேர்ச்சி பெற்று நீதிபதி இருக்கையில் அமரப்போகும் முதல் மௌலவி எனும் பெருமை பெறுகிறார்.