கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் அவர்கள் மூதூர் ஆதார வைத்தியசாலைக்கு புதிதாக கிடைக்கப்பெற்ற அம்பியூலன்ஸ் வாகனத்தை நேற்று (29) காலை கையளிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டார்.

அதன்பின், ஆளுநர் மருத்துவமனையை பார்வையிட்டார். அங்கு வைத்தியசாலை ஊழியர்களை சந்தித்த ஆளுநர் வைத்தியசாலையில் நிலவும் பிரச்சினைகளுக்கு தேவையான தீர்வுகளை வழங்குவது தொடர்பில் கவனம் செலுத்தினார்.

இந் நிகழ்வில் ஆளுநரின் செயலாளர் எல்.பி.மதநாயக்க, மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டீ.ஜீ.எம்.கொஸ்தா, பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மூதூர் இணைப்பாளர் முபாரக் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

கிண்ணியா நிருபர்கருத்துரையிடுக

Blogger இயக்குவது.