உயர்தரப் பரீட்சையின் போது மின்சாரம் துண்டிக்கப்படாமல் இருக்க கடுமையாக முயற்சிப்போம் என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.

உயர்தரப் பரீட்சைக் காலத்தில் மின்வெட்டை தவிர்ப்பதற்காக செயற்படுகின்றார்களா என நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மின்வெட்டைத் தவிர்ப்பதற்காக எரிபொருள் அடிப்படையிலான மின் உற்பத்தி நிலையங்களை இயக்க வேண்டும் எனவும் அதற்கமைவாக ஒரு அலகு 90 ரூபாவிற்கு கொள்வனவு செய்ய வேண்டும் எனவும் அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.

எரிபொருள் ஆலைகளை இயக்குவதற்கு பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திடம் இருந்து எரிபொருளைப் பெற வேண்டும் எனவும், அந்த எரிபொருளை கூட்டுத்தாபனத்திடம் கடனாகப் பெற்றால் அது பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு பாதகமான பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.