மட்டக்களப்பு கல்குடா பொலிஸ் பிரிவின் சிவன்கோயில் வீதி பேத்தாழையில் வீடொன்றின் கதவினை உடைத்து பெறுமதி வாய்ந்த பொருட்கள் சில திருடப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

குறித்த வீட்டில் யாரும் இல்லாத நிலையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவித்தனர்.

இதன்போது, 6 பவுன் தங்க நகைகள், 60,000 ரூபாய் பணம், ஒலி பெருக்கி பெட்டிகள், எரிபொருள் சிலிண்டர், மோட்டார் சைக்கிளின் உதிரிப்பாகங்கள் என பல்வேறு பொருட்கள் திருடப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

கடந்த 23 ஆம் திகதியன்று மாங்கேனியில் உள்ள தமது தோட்டத்திற்கு சென்றுவிட்டு நேற்று வீடு திரும்பிய போது வீட்டின் வாசல் கதவு உடைக்கப்பட்டு வீட்டினுள் நுழைந்து அலுமாரிகள் உடைக்கப்பட்டு பெறுமதி வாய்ந்த பொருட்கள் சில திருடப்பட்டுள்ளதாக சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்கள் கல்குடா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

குறித்த சம்பவ இடத்திற்கு மட்டக்களப்பு குற்றத் தடவியல் பொலிசார் வருகை தந்து விசாரணைகளை மேற்கொண்டனர்.

கல்குடா பொலிசார் இச் சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

-மட்டக்களப்பு நிருபர் குகதர்ஷன்-

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.