கிழக்கில் இறைச்சி கடைகளுக்கு பூட்டு

கிழக்கில் இறைச்சி கடைகளுக்கு பூட்டு

கிழக்கில் அதிக பிராணிகள் இறந்ததன் காரணமாக இறைச்சிகளில் நம்பக தன்மையை பேணும் பொருட்டும் பொது மக்களுக்கான சுகாதார மேம்பாட்டை உறுதிசெய்யும் பொருட்டும் சட்ட விரோத விற்பனைகளை தவிர்க்கும் முகமாகவும் இன்று முதல் இறைச்சிக்கடைகளை மூடுவதற்கு கிழக்கு மாகாண உள்ளூராட்சி திணக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

மட்டக்களப்பு, அக்கரைப்பற்று மற்றும் கல்முனை நகரசபை பகுதிகளில் உள்ள அனைத்து இறைச்சிக் கூடங்கள் மற்றும் இறைச்சிக் கடைகள் (கோழிக் கடைகள் தவிர) இன்று முதல் ஒரு வார காலத்திற்கு மூடப்படும் என கிழக்கு மாகாண உள்ளூராட்சி திணைக்களம் தெரிவித்துள்ளது

கருத்துகள்