ஆடைத்தொழிற்சாலைகள் மூடப்படும் அபாயம்.
மின்கட்டணத்தை மீண்டும் உயர்த்தினால் ஆடைத் தொழில் முற்றிலும் நலிவடையும் என வர்த்தக மண்டல ஊழியர்களின் தேசிய மையம் கூறுகிறது.
ஆடைத் துறையில் உள்ள பல பாரிய கைத்தொழில்களை நாட்டிலிருந்து வெளியேற ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அதன் அழைப்பாளர் காமினி ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
பல ஆடைத் தொழிற்சாலைகள் இம்மாத இறுதியில் நாட்டை விட்டு வெளியேறத் தீர்மானித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போதைய சூழ்நிலையில் ஊழியர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக வர்த்தக வலய ஊழியர் தேசிய மத்திய நிலையத்தின் அழைப்பாளர் காமினி ரத்நாயக்க மேலும் தெரிவிக்கின்றார்.
கருத்துரையிடுக