இலங்கை உள்ளிட்ட கடன் நெருக்கடியை எதிர்நோக்கும் நாடுகளுக்கு தீர்வைக் கொண்டுவர சர்வதேச நாணய நிதியம் கடுமையாக உழைத்து வருவதாக அதன் முகாமைத்துவப் பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோஜியேவா தெரிவித்துள்ளார்.​

அமெரிக்க சிபிஎஸ் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் அவர் இதனை கூறியுள்ளார்.​

கேள்வி - சர்வதேச நாணய நிதியம் தெரிவிக்கும் வகையில் குறைந்த வருமானம் கொண்ட பல நாடுகள் கடன் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளமை உலக நிதி நெருக்கடியில் எவ்வாறான தாக்கத்தை ஏற்படுத்தும்?​

"இதுவரை, இந்த நாடுகள் எதிர்கொள்ளும் கடன் நெருக்கடி உலகளாவிய நெருக்கடியை உருவாக்கும் அளவுக்கு குறிப்பிடத்தக்க அளவை எட்டவில்லை. செட் (Chad), எத்தியோப்பியா, சாம்பியா, கானா, லெபனான், சாம்பியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகள் கடுமையான கடன் நெருக்கடியை எதிர்கொள்கின்றன. அதற்கான தீர்வுகளைத் ஆராய்ந்து வருவதை அந்த நாட்டு மக்களுக்குச் தெரிவித்துக் கொள்கிறேன். இருப்பினும், தற்போது இது உலகளாவிய பரவல் இல்லை. ஆனால், சுமார் 25% வளரும் நாடுகள் இவ்வாறு கடன் நெருக்கடியை நோக்கி நகர்வதை காணக்கூடியதாக உள்ளது. இந்த நாடுகளின் பட்டியல் இப்படியே வளர்ந்தால், அது உலகளாவிய நெருக்கடியாக மாறும் அபாயம் உள்ளது. எனவேதான் சர்வதேச நாணய நிதியம் கடன் நெருக்கடிக்கு தீர்வு காண கடுமையாக உழைத்து வருகிறது. அதற்காக, பரிஸ் கிளப் போன்ற பாரம்பரிய கடன் வழங்குநர்கள் மற்றும் சீனா, இந்தியா மற்றும் சவுதி அரேபியா போன்ற பாரம்பரியமற்ற கடன் வழங்குநர்களுடன் நாங்கள் பணியாற்றி வருகிறோம்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.