பாடசாலை வேன்கள் மற்றும் பஸ்களில் பாலியல் துஷ்பிரயோகங்கள் அதிகரித்துள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது

மாணவர்களை ஏற்றிச் செல்லும் வேன் மற்றும் பஸ்களின் சாரதிகள் மற்றும் உதவியாளர்கள் மேற்கொள்ளும் பல்வேறு பாலியல் துஷ்பிரயோகங்கள் தொடர்பில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபைக்கு பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளாக அதிகார சபையின் தலைவரான சிரேஷ்ட விரிவுரையாளர் உதய குமார அமரசிங்க தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

சில சிறிய மாணவர்கள் பாடசாலை முடிந்த பின்னரும், மேல் வகுப்பு மாணவர்கள் வரும் வரை பாடசாலை வாகனங்களில் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது

அந்தச் சூழ்நிலைகளில் சிறார்கள் துஷ்பிரயோகம் செய்யப்படும் சம்பவங்கள் சமீபகாலமாக அதிகரித்துள்ளன.


எனவே, பெற்றோர்கள் பிள்ளைகள் தொடர்பில் அவதானமாக இருக்க வேண்டுமென தெரிவித்துள்ளார்

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.