பல்கலைக்கழகத்திற்கு உட்சேர்க்க முன் மாணவர்களிடம் உறுதிமொழி

மாணவர்களிடம் உறுதிமொழி சான்றிதழைப் பெற்று பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை சேர்க்கும் புதிய திட்டம் தொடங்கப்படும் என்று உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்.

பல்கலைக்கழகத்தின் சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்க மாட்டோம் என்றும் பல்கலைக்கழக வளாகத்தில் கலவரத்தை ஏற்படுத்த மாட்டோம் என்றும் உறுதிமொழி சான்றிதழில் கையொப்பம் பெறுவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

உயர்தரத்தில் சித்தியடைந்ததன் பின்னர் பல்கலைக்கழகத்திற்குள் நுழைவதற்கான அர்ப்பணிப்பு மற்றும் உரிமையின் பொறுப்பு குறித்து மாணவர்களுக்கு தெரிவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இது ஒரு சுமூக உடன்படிக்கை என்றும், அந்த ஒப்பந்தத்தை மீறும் மாணவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அவர்களின் மாணவர் சேர்க்கை இரத்து செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும், பல்கலைக்கழகத்தில் சேரும் ஒவ்வொரு மாணவன், மாணவிக்காகவும் ஆண்டுக்கு 8 லட்சம் ரூபாய் செலவழிப்பதாகவும், அதன்படி 4 ஆண்டுகள் படித்து விட்டு பல்கலைக்கழகத்தை விட்டு வெளியேறும் மாணவர்களுக்காக 4 ஆண்டுகளில் 32 லட்சம் ரூபாய் என்ற பெரும் தொகையை அரசு செலவழிக்க உள்ளதாகவும் அவர் கூறினார்.

மாணவர்களிடமிருந்து இவ்வாறான உறுதிமொழிப் படிவம் பெறுவது இதுவரை நடக்கவில்லை எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.