ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் ஏற்பாட்டில் ஓழுங்கு செய்யப்பட்ட  சர்வதேச பெண்கள் தின நிகழ்வு 

12.03.2023 கொழும்பு -லக்ஷ்மன் கதிர்காம நிலையத்தில் முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவி புர்ஹான் பீபி இப்திக்கார் தலைமையில் நடைபெற்றது.
இந் நிகழ்வு  கிழக்கு மற்றும் மேற்கில் பெண்களின்  உரிமைகளும் ,மதிப்புக்களும் எனுத் தொனிப்பொருளில் நடைபெற்றது.  இந் நிகழ்வில் மனித உரிமை ஆணைக்குழுவின் முன்னாள் தலைவி  டாக்டர்  தீபிஹா உடகம, சட்டத்தரணி சிவஸ்திகார அருலிங்கம், ஈரான் நாட்டில் இருந்து வருகை தந்த கலாநிதி ஸ்ஹேரேஹ் மிப்ராஜி, கொழும்பு மத்திய வைத்தியசாலையின் சிரேஸ்ட வைத்திய அதிகரி  நசிகா அமீர் ஆகியோர்கள் தமது கருத்துக்களை முன் வைத்தனர்
எக்ஸ்பிரஸ் நியுஸ் பிரதம ஆசிரியை ஹனா இப்ராஹிம்  இந் நிகழ்வினை நெறிப்படு்த்தினார். அத்துடன் வரவேற்புரையை மீடியாபோரத்தின் செயலாளர் சிஹார் அனீஸ்,  மீடியா போரத்தின் ஆலோசகர் என்.எம். அமீன் நன்றியுரையையும் நிகழ்த்தினார்கள்.  இந் நிகழ்வின்போது முஸ்லிம் மீடியா போரத்தின் டயரிகள் அதிதிகளுக்கு கையளிக்கப்பட்டன. 
மீடியாபோரத்தின் செயற்குழு உறுப்பிணர்கள், பெண் ஊடகவியலாளர்கள், பெண்கள் அமைப்பின் உறுப்பிணர்களும் பாராளுமன்ற உறுப்பிணர் ஏ.எச்.எம் பௌசி, ஈராண் நாட்டின் கலாச்சாரப் பணிப்பாளர் உட்பட அதிதிகளும் கலந்து சிறப்பித்தனர்.

இந் நிகழ்வின்போது  முஸ்லிம் பெண்கள் கலை ,கலாச்சாரம், மற்றும் முஸ்லிம் பெண்கள் உரிமைகள் இஸ்லாம் விரிவாகவும ்அல் குர் ஆண் அத்தியாயம் சூறா  நிசாவில்  என்ற வசனத்தில் முஸ்லிம் பெண்களுக்கு மட்டுமல்ல முழு பெண்களுக்கு இஸ்லாம ்உரிமைகளை  வழங்கியுள்ளது. எனவும் டாக்ர் தீபிஹா அங்கு உரை நிகழ்த்தினார்.. 

(அஷ்ரப் ஏ சமத்)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.