அரச காணி உரித்தாவணம் கையளிப்பு
சம்மாந்துறை மத்திய மகா வித்தியாலயம் (தேசிய பாடசாலை)யின் 2023 வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி 2023.03.19ம் திகதி விமர்சையாக நடைபெற்றது.
இதன்போது அப்பாடசாலையின் நீண்ட கால தேவையாகவிருந்த காணிக்கான உரித்தாவணம் கல்வித் திணைக்களத்திடம் ஒப்படைக்கும் பொருட்டு சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ். எல். முஹம்மத் ஹனிபா அவர்களால் சம்மாந்துறை வலய கல்விப் பணிப்பாளர் எஸ். எம். எம். உமர் மௌலானா அவர்களிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.