ஆப்பிரிக்க நாடான சூடானின் வடக்கு பகுதியில் உள்ள ஒரு தங்க சுரங்கத்தில் ஏராளமான தொழிலாளர்கள் வேலை பார்த்து கொண்டிருந்தபோது திடீரென அந்த சுரங்கத்தின் மேற்பகுதி இடிந்து விழுந்ததில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.


இது குறித்து தகவலறிந்த மீட்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு இடிபாடுகளில் சிக்கி கொண்டிருந்த சுரங்க தொழிலாளர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.


எனினும் இந்த விபத்தில் 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் பல தொழிலாளர்கள் இடிபாடுகளில் சிக்கி இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. எனவே அவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.கருத்துரையிடுக

Blogger இயக்குவது.