இலங்கை ஆதிவாசிகள் பற்றி முழுவதுமாக அறிந்துக்கொள்வதை நோக்கமாக கொண்ட நீண்ட பயணமிது. யாரிந்த பூர்வக்குடிகள்? அவர்கள் கூறுகிற வரலாறுதான் என்ன? ஆதிவாசி தலைவர்களுடன் இணைந்த அருமையான பயணமிது. இந்த பயணங்கள் முழுவதும் என்னுடன் ஒரு அற்புதமான மனிதர் துணையிருந்தார். அவரை அன்புடன் அப்பாவென அழைக்க ஆரம்பித்திருக்கிறேன்.

 அற்புதமான ஒரு அதிகாலையில் ஆதிவாசி தலைவரை சந்தித்தேன். என்னால் முடிந்தளவு ஆதிவாசி மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களை வழங்கினேன். அன்று ஆதிவாசி தலைவர்களிற்கான கூட்டம் ஒன்று தம்பானையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. வன்னியெத்தோ அனைத்து வேடுவருக்குமான இலங்கை தலைவர். இன்னும் எட்டு தலைவர்கள் அவரிற்கு கீழ் இருந்தார்கள். வாகரை வேடுவ தலைவர், மகாஓயா வேடுவ தலைவரை சந்தித்து பேசுவதற்கான வாய்ப்பு கிடைத்தது. 

உண்மையில் யாரிந்த பூர்வக்குடிகள் என்பது பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமா? இந்த வார மெட்ராஸ் பேப்பரில் அது பற்றித்தான் எழுதியிருக்கிறேன்.

"
 இலங்கையில் இன்று உள்ள யாரும் இந்த மண்ணின் பூர்வக்குடிகளல்ல. இந்த ஆதிவாசி மக்களே இலங்கையின் பூர்வ குடிகளாவார். மகாவம்ச கதையின் படி கி. மு 2000 வருடங்களிற்கு முதல் குவேனி, விஜய இளவரசன் இருவருக்கும் பிறந்த குழந்தைகளான திசாலா, ஜீஹச்த என்பவர்களின் வழி வந்தவர்களே இந்த ஆதிவாசிகள் என குறிப்பிடப்பட்டாலும். வாய்வழி கதைகளை விட இந்த ஆதிவாசிகள் 2000 வருடங்களையும் கடந்து இந்த நாட்டில் பரவலாக வாழ்ந்தார்கள் என்பதற்கான மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன...............

_  மெட்ராஸ் பேப்பர்

Link : 
https://www.madraspaper.com/author/narmi/

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.