சாய்ந்தமருது ஜீ.எம்.எம்.எஸ். பாடசாலையின் வித்தியாரம்ப விழா


சாய்ந்தமருது அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலையின் (GMMS) தரம் ஒன்றுக்கு புதிதாக மாணவர்களை வரவேற்கும் வித்தியாரம்ப விழா நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை (25) கல்லூரியின் திறந்த வெளி அரங்கில் இடம் பெற்றது.

கல்லூரியின் அதிபர் எம்.ஐ.எம். இல்யாஸ் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையின் கண் வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எம். அல்-அமீன் றிசாட் பிரதம அதிதியாக கலந்து கொண்டதோடு, பாடசாலையின் பழைய மாணவரும் அக்கரைப்பற்று வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பொறியியலாளருமான எம்.ஐ.எம்.ரியாஸ், ஆரம்ப கல்வி ஆசிரிய ஆலோசகர் ஏ சஹரூன் மற்றும் சாய்ந்தமருது மக்கள் வங்கியின் உப முகாமையாளர் ஏ.ஆர்.றிஸ்வான் முஹம்மட் ஆகியோர் நிகழ்வில் கௌரவ அதிதியாகவும் கலந்து கொண்டனர்.

தரம் இரண்டு மாணவர்களால் புதிய மாணவர்கள் மாலை அணிவித்து இனிப்பு வழங்கி வரவேற்கப்பட்டனர்.

பிரதி அதிபர், உதவி அதிபர் உட்பட பகுதித்தலைவர்கள், ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்தி குழுவினர், பழைய மாணவர் சங்கத்தினர் மற்றும் நலன் விரும்பிகள் முதலாம் தரத்திற்கு புதிதாக இணைத்துக் கொள்ளப்பட்டுள்ள புதிய மாணவர்கள், பெற்றோர்கள் எனப் பலரும் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

இதன்போது மாணவர்களின் கலை கலாசார நிகழ்வுகளும் நிகழ்வை மேலும் மெருகூட்டின.


(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.