லிட்ரோ எரிவாயு விலை நாளை (04) நள்ளிரவு முதல் குறைக்கப்படவுள்ளது
 
சமையல் எரிவாயு விலை நாளை (04) நள்ளிரவு முதல் குறைக்கப்படும் என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.

12.5 கிலோகிராம் எரிவாயுவின் விலை 300 ரூபாவிற்கும் அதிக தொகையால் குறைக்கப்படுமென லிட்ரோ நிறுவன தலைவர் முதித்த பீரிஸ் தெரிவித்துள்ளார். 

5 கிலோகிராம் மற்றும் 2.5 கிலோகிராம் எரிவாயுவின் விலைகளும் குறைக்கப்படவுள்ளன. 

இதற்கான உத்தியோகபூர்வ அறிவிப்பு நாளை வௌியிடப்படுமென லிட்ரோ நிறுவன தலைவர் முதித்த பீரிஸ் குறிப்பிட்டுள்ளார்.


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.