றிஸ்வி முஃப்திக்கு
"ஷேகு ஸ்ரீலங்கா" பட்டம்

   அகில இலங்கை ஜம் - இய்யத்துல் உலமா தலைவர் அல் - ஆலிம் அல் - முஃப்தி எம்.ஐ.எம். றிஸ்வி, "ஷேகு ஸ்ரீலங்கா" பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
   புத்தளம் - தில்லையடி முஹாஜிரீன் அரபுக் கல்லூரியின் இரண்டாவது அல் ஆலிம் மற்றும் அல் ஹாஃபிழ் பட்டமளிப்பு விழாவின்போதே (11) அவர் இவ்வாறு கௌரவிக்கப்பட்டார்.
   இச்சிறப்பு நிகழ்வில், பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான றிஷாட் பதியுதீன், கல்லூரி சார்பாக பட்டத்தை வழங்கினார். 
   கல்லூரி அதிபர் மௌலவி முபாரக் அல் - ரஷாதி, புத்தளம் மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம். எச்.எம். நவவி, புத்தளம் மாவட்ட ஜம் - இய்யத்துல் உலமா தலைவர் அப்துல்லாஹ் மஹ்மூத் ஆலிம், ஹாஜிகளான ஹனீப் பாய், முஹம்மத் நிஸாம் உள்ளிட்ட அதிதிகள் பலர் இச்சிறப்பு நிகழ்வில் கலந்து கொண்டனர்.

( மினுவாங்கொடை நிருபர் )
( ஐ.ஏ. காதிர் கான் )

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.