கஹட்டோவிட்டாவில் முதன் முதலில் ஆரம்பிக்கப்பட்டதும் நீண்ட வருட வரலாற்றைக் கொண்டதுமான அல் முஸ்தபவிய்யா அஹதிய்யா நாட்டில் ஏற்பட்ட அசாதாரண நிகழ்வுகள் காரணமாக ஒரு ஓரிரு வருடங்களாக நடைபெறவில்லை.

இந்த நிலையில் நாளுக்கு நாள் மோசமடைந்து கொண்டு செல்லும் மாணவர்களது சன்மார்க்க அறிவு மற்றும் ஒழுக்கம் தொடர்பில் கூடிய கரிசனை காட்ட வேண்டிய இக்கட்டான கட்டம் தற்போது எல்லா மட்டங்களிலும் உணரப்பட்டு வருவதோடு இது போன்ற அஹதிய்யா வகுப்புக்களை மீளவும் ஆரம்பிப்பதற்கான உத்வேகமும் வழங்கப்பட்டதன் பிரதிபலனாகவே நிர்வாகத்தினரின் கடும் முயற்சியின் பலனாக இவ்வாறு மீள் ஆரம்பம் செய்யப்பட்டது.

இந்த வகையில் தவிர்க்க முடியாத சில காரணிகளால் தற்காலிகமாக நடைபெறாமல் இருந்த அஹதிய்யா வகுப்புகள் நேற்றைய தினம் உத்தியோகபூர்வ வைபரீதியாக கஹட்டோவிட்ட அல் பத்ரியா மகா வித்தியாலய பிரதான மண்டபத்தில் நடைபெற்றது.

காலை 8.30மணிமுதல் மாணவர் பதிவோடு ஆரம்பிக்கப்பட்ட மேற்படி நிகழ்வு 9மணிமளவில் மாணவன் அஹ்மத் அவர்களின் அழகிய கிராஅத்துடன் ஆரம்பமானது.

நிகழ்வில் தலைமை உரை வரவேற்பு மற்றும் அஹதிய்யா வரலாற்று குறிப்புகள் அடங்கிய உரையை அஹதிய்யா பாடசாலையின் நிர்வாக குழு தலைவர் அல் ஹாஜ் ஜிப்ரி BA Kuwait அவர்களால் நிகழ்த்தப்பட்டது.

இதனையடுத்து சிறப்பு அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றிய கஹட்டோவிட்ட அல் பத்ரியா பாடசாலை அதிபர் கௌரவ அஸ்மிர் அவர்கள் அஹதிய்யா பாடசாலையின் இன்றைய கால தேவை குறித்தும் இதனை சிறப்பாக கொண்டு நடாத்துவதற்கு தம்மாலான பூரண ஒத்துழைப்பு வழங்குவதாகவும் பெற்றோர்களும் இதன் முக்கியத்துவம் அறிந்து மாணவர்களை அஹதிய்யா வகுப்புகளுக்கு அனுப்ப வேண்டும் எனவும்.

பாடசாலையால் அஹதிய்யா நேரத்தில் குறிப்பிட்ட வகுப்புகளுக்கு எவ்வித பிரத்தியே வகுப்புகளும் போடுவதில்லை என்றும் தமது பிள்ளைகளை எவ்வாறு நல்வழிப்படுத்துவது என்று கவலையுடன் காணப்படும் பெற்றோர்களுக்கு அஹதிய்யா மூலம் நற்பலன் அடைய முடியும் எனவும் தெரிவித்தார்.

இதனையடுத்து சிறப்பு உரையாற்றிய பேராதனை பல்கலைக்கழக உதவி விரிவுரையாளராக கடமையாற்றிவரும் இக்ராம் அஹமத் அவர்களின் உரையில் பிரயோஜனமான கல்வி கற்க வேண்டியதன் அவசியம் முக்கியத்துவம் குறித்து மார்க்க கண்ணோட்டம் மற்றும் சமூக கண்ணோட்டம் குறித்த தெளிவான ஆழமான அழகான உரையொன்றை நிகழ்த்தினார்.

அதில் சன்மார்க்க கல்விக்கும் ஒழுக்க மேம்பாடு தொடர்பான பயிற்சிக்கும் இம்மைக்கும் மறுமைக்கும் பிரயோஜனமான சன்மார்க்க கல்வியின் அவசியம் குறித்து மிக விளக்கமாக உரையாற்றிய தோடு  இவற்றுக்கு அஹதிய்யா மகத்தான பங்களிப்பை வழங்கி வருகிறது எனவும் தானும் இந்த அஹதிய்யாவில் கல்வி கற்ற காரணமாகவே தற்போதிருக்கும் நிலையை அடைவதற்கும் அஹதிய்யா பாடசாலை கல்வி சிறந்த அடித்தளத்தை இட்டிருக்கிறது என்பதையும் தனது சொந்த அனுபவத்தில் அஹதிய்யாவின் முக்கியத்துவத்தையும் மிகவும் சிறப்பாக விளக்கினார்.

மேலும் அஹதிய்யாவின் பரீட்சைகள் அதன் பெறுமதிகள் பல் கழைக்கழக நுழைவுக்கு வெட்டுப்புள்ளி போதாமல் இருந்தால் அஹதிய்யா இறுதி சான்றிதழ் பரீட்சை சான்றிதழை சமர்ப்பித்தால் அதற்கும் புள்ளிகள் வழங்கப்படுகிறது என்பதால் பல் கலைக்கழக வாய்ப்பை இழக்க நேரிடும் மாணவர்களுக்கும் அஹதிய்யா சான்றிதழ் மிகவும் கைகொடுக்கும் எனவும் குறிப்பிட்டார்.

மேலும் அஹதிய்யாவின் கடந்த கால செயற்பாடுகள் வரலாற்று நிகழ்வுகள் குறித்தும்  செயலாளர் சகோதரர்  ஹுஸ்னியின் தயாரிப்பில் அமைந்த அஹதிய்யா வரலாற்று ஆவணத்தொகுப்பொன்றையும்  திரையில் காட்டி விளக்கமளித்தார்.

இதனையடுத்து விசேட அழைப்பின் பேரில் கலந்து கொண்ட கம்பஹா மாவட்ட அஹதிய்யா சம்மேளனம் சார்பில் உரையாற்றிய அஷ்செய்கு பஸ்லுர் ரஹ்மான் மௌலவி அவர்களின் உரை இடம்பெற்றது.

இதில் அஹதிய்யா வகுப்புகள் இடையூரின்றி நடாத்தப்பட வேண்டும் எனவும் பாடசாலை அதிபர்களுக்கும் அஹதிய்யாவுக்கும் சிறந்த உறவு காணப்பட வேண்டும் எனவும் சிற்சில காரணிகளால் அஹதிய்யா வகுப்புகள் தடைபட்டு விட கூடாது எனவும் அவ்வாறு குறைபாடுகள் அஹதிய்யாவால் நடைபெற்று விட இடமளிக்காமல் அதன் நிர்வாகம் கவனம் செலுத்த வேண்டும் எனவும்,அஹதிய்யாவை இடைவிடாது நடாத்துவதம் நீண்ட வரலாற்றை தன்னகத்தே கொண்ட இந்த அஹதிய்யாவை விழ வைக்க கூடாது அதனை தூக்கி எடுப்பதற்கு அனைத்து தரப்பினரும் ஒத்துழைக்க வேண்டும் எனவும் பத்றியாவின் புதிய அதிபர் இதற்காக காட்டும் ஆர்வத்தை தான் பெரிதும் வரவேற்பதாகவும் அதற்காக நன்றியையும் பாராட்டினார்.

மேலும் கஹட்டோவிட்ட என்பது சிறந்த மார்க்க பிண்ணணியை கொண்டதும் சிறந்த கல்விமான்கள் புத்திஜீவிகள் அரச உயர் பதவி உத்தியோகத்தர்கள் காணப்படும் சிறந்த ஊர் எனவும் தனதுரையில் குறிப்பிட்டார்.

நிகழ்வில் நன்றியுரையை அஹதிய்யா நிர்வாக சபை உறுப்பினர் சகோதரர் அர்சாத் இஸ்மாயில் அவர்களால் நன்றியுரை வழங்கப்பட்டது.
நிகழ்வின் இறுதியில் புதிதாக சேர்க்கப்பட்ட அஹதிய்யா மாணவர்களின் துஆ ஸலவாத்துடன் அஹதிய்யா மீள் ஆரம்ப நிகழ்வு சிறப்பாக இனிதே நிறைவு பெற்றது.

நிகழ்வில் கௌரவ அதிதியாக இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் உதவி பணிப்பாளராக கடமை புரியும் அஷ்செய்கு அப்துர்ரஹ்மான் நளீமி அவர்கள் கலந்து கொண்டதுடன் பாடசாலை உதவி அதிபர் ஆசிரியர் ரம்ஸி அலி மற்றும் பள்ளிவாசல் கதீப்மார்களான மௌலவி பர்ஸான் முர்ஸி , மௌலவி ரிழா அஹமத் போன்றோரும் ,அல் மத்ரஸதுல் முஸ்தபவிய்யா அதிபர் அப்துல் பாரி ஆலிம் BA Kuwait அவர்களும் இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்ததோடு பெற்றோர்கள் மாணவர்கள் ,நலன் விரும்பிகள் என பல்வேறு பட்ட தரப்பினரும் கலந்து கொண்டிருந்தமை சிறப்பம்சமாகும்.

நிகழ்வை அஹதிய்யா நிர்வாக சபை உறுப்பினர் சகோதரர் எம்.ஆர்.லுதுபுள்ளாஹ் தொகுத்து வழங்கினார்.
அஹதிய்யா வகுப்புகள் எதிர் வரும் ஞாயிற்று கிழமை முதல் காலை 7.30 மணி தொடக்கம் கஹட்டோவிட்ட அல் பத்ரியா மகா வித்தியாலயத்தில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.