இழப்பீடு 6.4 பில்லியன் அமெரிக்க டொலராக மதிப்பீடு
X-Press Pearl கப்பல் விபத்திற்கான இழப்பீட்டு தொகை 6.4 பில்லியன் அமெரிக்க டொலராக மதிப்பீடு

 X-Press Pearl கப்பல் விபத்தினால் ஏற்பட்ட சேதம் தொடர்பான இழப்பீட்டுத் தொகை 6.4 பில்லியன் அமெரிக்க டொலர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது.

ஜனவரி மாத அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளதாக சட்ட மா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது.

X-Press Pearl கப்பல் விபத்தினால் ஏற்பட்ட சேதம் தொடர்பான சட்ட நடவடிக்கைகளுக்காக குழுவொன்று அடுத்த மாதம் சிங்கப்பூர் செல்லவுள்ளதாக சட்ட மா அதிபர் திணைக்களம் கூறியுள்ளது.

அங்குள்ள கப்பல் நிறுவனம் மற்றும் ஏனைய பிரதிநிதிகளுடன் குறித்த குழு பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.