ஆகஸ்ட் 23 ஆம் திகதி மாலை 5.47 மணிக்கு : சந்திரயான் 3
நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கி ஆய்வு செய்வதற்காக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) சந்திரயான் 3 விண்கலத்தை ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் மையத்தின் 2 வது ஏவுதளத்தில் இருந்து எல்.வி.எம்.3- எம்4 (ஜி.எஸ்.எல்.வி.மார்க்-3) ரொக்கெட் மூலம் நேற்று பிற்பகல் 2.35 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட்டது.
இந்த ரொக்கெட் திட்டமிட்டபடி பயணித்து, சந்திரயான் 3 விண்கலத்தை சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக செலுத்தியது.
இந்நிலையில், அனைத்தும் சரியாக இருந்தால், சந்திரயான் விண்கலம் வரும் ஆகஸ்ட் 23 ஆம் திகதி மாலை 5.47 மணிக்கு தரையிறங்கும் என்று இஸ்ரோ தலைவர் தெரிவித்துள்ளார்.
ரூ.600 கோடி மதிப்பீட்டில் விண்கலம் வெற்றிகரமாக ஏவப்பட்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய இஸ்ரோ தலைவர் சோம்நாத், சந்திரயான்- 3 ஆகஸ்ட் 1 ஆம் திகதி நிலவின் சுற்றுப்பாதையில் செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
கருத்துகள்
கருத்துரையிடுக