இன்று (4) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் உள்நாட்டு சமையல் எரிவாயு கொள்கலன் விலையை குறைக்கிறது

இலங்கையில் திரவமாக்கப்பட்ட பெற்றோலிய எரிவாயுவின் (LPG) முன்னணி விநியோகஸ்தர் லிட்ரோ கேஸ் லங்கா, இன்று (4) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் உள்நாட்டு சமையல் எரிவாயு கொள்கலன் விலையை குறைக்கிறது.

லிட்ரோ கேஸ் லங்காவின் தலைவர் முதித பீரிஸின் கூற்றுப்படி, 12.5 கிலோகிராம் எல்பிஜி சிலிண்டரின் விலை ரூ. 3,000க்கும் குறைவாக இருக்கும் என தெரியவருகிறது. 

உத்தியோகப்பூர்வ விலைக்குறைப்பு விபரங்கள் இன்று காலை 10 மணிக்குப் பின்னர் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

உலகளாவிய ரீதியில் விலை குறைவடைந்தமை மற்றும் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி அதிகரிப்பு என்பனவே இந்த விலையில் ஏற்பட்ட வீழ்ச்சிக்கு காரணம் என கூறப்படுகிறது. 

முந்தைய விலை திருத்தத்தில் 12.5 கிலோ எடை கொண்ட கொள்கலன் விலை ரூ. 452 குறைக்கப்பட்டு ரூ. 3,186 ஆக நிரணயிக்கப்பட்டது. 

அதேபோல 5 கிலோ எடை கொண்ட கொள்கலன் ரூ. 181 குறைக்கப்பட்டு ரூ. 1,281 ஆகவும், 2.3 கிலோ கொள்கலன் ரூ. 83 குறைக்கப்பட்டு ரூ. 598 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டன.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.