திருகோணமலை சீன குடா பகுதியில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த விமானப்படைக்குச் சொந்தமான விமானமொன்று விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
திருகோணமலை சீன குடா பகுதியில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த விமானப்படைக்குச் சொந்தமான விமானமொன்று விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
இலங்கை விமானப்படை சீன குடா பயிற்சி முகாமில் அமைந்துள்ள இலக்கம் 01 விமானப் பயிற்சிப் பிரிவின் விமானிகளுக்குப் பயிற்சியளிக்கப் பயன்படுத்தப்படும் PT 6 ரக விமானம் இன்று (07) முற்பகல் 11.25 மணியளவில் வான் சோதனைக்காக புறப்பட்டுள்ளது.
இந்த விமானம் 11.27 அளவில் விமானப்படை சீன குடா பகுதியில் விழுந்து நொறுங்கியதாகவும், விமான ஆய்வு பணிக்காக அங்கு பயணித்த விமானி மற்றும் பொறியாளர் அதிகாரி உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைகளுக்காக விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ ஏற்கனவே விசேட விசாரணைக் குழுவொன்றை நியமித்துள்ளதுடன், புலனாய்வாளர்கள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
கருத்துகள்
கருத்துரையிடுக