கல்முனை ஸாஹிறா தேசியக் கல்லூரி பெட்மின்டன் அணி (Badminton) மாகாணத்தில் சம்பியனாகி தேசிய மட்டத்திற்கு தெரிவு!


கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கிடையிலான பெட்மிண்டன்(Eastern Province School Badminton Tournament )போட்டியில் கல்முனை ஸாஹிறா தேசியக் கல்லூரி மாணவர்கள் 18 வயதுப் பிரிவில் விளையாடி மாகாண சம்பியனாக மீண்டும் ஒரு தடவை நிருபித்து தேசிய மட்டத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர். 

திருகோணமலை மக்கெய்சர் உள்ளக அரங்கில் பாடசாலைகளுக்கான பெட்மின்டன் போட்டிகள் அண்மையில் இடம் பெற்றது.

கிழக்கு மாகாண பெட்மிண்டன் 18 வயதுப் பிரிவில் சம்பியன்களாக தெரிவு செய்யப்பட்டு தேசிய மட்ட போட்டிக்கு தெரிவாகிய மாணவர்களுக்கும்,
பயிற்றுவித்து போட்டிக்காக அழைத்து சென்ற பொறுப்பாசிரியர்களான ஏ.எம்.அப்ராஜ் ரிலா,எம்.எச்.எம்.முஸ்தன்சீர் மற்றும் மாணவர்களை ஊககப்படுத்திய பெற்றோர்களுக்கு கல்லூரி அதிபர் எம்.ஐ.ஜாபிர்,பிரதி அதிபர்கள்,ஆசிரியர்கள்,கல்விசாரா ஊழியர்கள்,பழைய மாணவர்கள்,பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக் குழுவினர்,பாடசாலை நலன்விரும்பிகள் உள்ளிட்ட கல்வி சமூகம் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளனர்.

( எம்.என்.எம்.அப்ராஸ்) 

கருத்துகள்