மறைந்த முன்னாள் உயர்கல்வி பிரதி அமைச்சர் அல்ஹாஜ் எம்.எம்.மயோன் முஸ்தபா அவர்களுக்கு மறைவான காயிப் ஜனாஸாத் தொழுகையும்,விசேட துஆ பிரார்த்தனையும் கல்முனை முஹ்யித்தீன் ஜும்ஆ பெரிய பள்ளிவாசலில் ஜும்ஆ தொழுகையின் பின்னர் இன்று (01)இடம்பெற்றது.

கல்முனை முஹ்யித்தீன் ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் 
நிருவாகத்தின் ஏற்ப்பாட்டில் இடம்பெற்ற 
இந்நிகழ்வில் அல்ஹாஜ் மௌலவி டி.ஆர்.நௌபர் அமீன் அவர்களினால் ஜனாஸா தொழுகை நடாத்தப்பட்டு,துஆ பிராத்தனையும் இடம்பெற்றது.

இதன் போது கல்முனை முஹ்யித்தீன் ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் நிர்வாக சபை தலைவர் டாக்டர் அல்ஹாஜ் எஸ்.எம்.ஏ.அஸீஸ் கலந்து கொண்டு நினைவு உரையாற்றுகையில்;மக்களுக்காக அரசியலில் பயணத்தை ஆரம்பித்தவர் மறைந்த முன்னாள் உயர்கல்வி பிரதி அமைச்சர் அல்ஹாஜ் எம்.எம்.மயோன் முஸ்தபா அவர்கள் தனது செல்வத்தின் மூலமும் தனது அரசியல் பதவியின் மூலம்  மக்கள் பணிக்காக உயர்வினை கண்டும்,பல சிரமங்களை எதிர் கொண்டும் இறுதி வரை மக்களுக்கு உதவியினை செய்தவராவார்.

கல்முனை பிரதேச மக்களுக்கு பல திட்டங்களை மக்கள் நலனுக்காக அறிமுகம் செய்தவர்.இப் பிரதேச மாணவர்களின் நலன் கருதி கணனி கல்வியினை கொண்டு வந்தவர் இதன் மூலம் பலர் பயன் பெற்றனர்.

மேலும் வெளிநாடு செல்வோருக்கு பயன்பெற வேண்டி வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தினை எமது பிரதேசத்தில் அமைத்து அதில் எமது பிரதேச மக்களும் நாட்டு மக்களும் பயன்பெற்றதுடன்,எமது பள்ளிவாசலுக்கு முன்னாள் உள்ள பொது சந்தையினை ஆரம்பித்து வைத்து பங்களிப்பு செய்தவராவர் எல்லோருடனும் மிகவும் என்றும் அன்புடன் இருந்தவர் இவருக்காக பிராத்திப்போம் என்றார்.

இதன் போது முன்னாள் உயர்கல்வி பிரதி அமைச்சர் அல்ஹாஜ்  எம்.எம்.மயோன் முஸ்தபாவின் புதல்வர் ரிஸ்லி முஸ்தபா மற்றும் குடும்பத்தினர் அதிகளவிலான பொது மக்கள் கலந்து கொண்டனர்.

அம்பாறை மாவட்டத்தில் மறைந்த முன்னாள் உயர்கல்வி பிரதி அமைச்சர் அல்ஹாஜ் எம்.எம்.மயோன் முஸ்தபா அவர்கள் பல்வேறு சேவைகள் புரிந்து மக்கள் மக்கள் மனதில் நீங்காத ஒரு அரசியல்வாதியாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.

( எம்.என்.எம்.அப்ராஸ்)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.