மலேசியாவில் இடம்பெற்ற IFMA MUAY THAI SCHOOL WORLD CHAMPIONSHIP 2026 ; இலங்கை அணி 46 பதக்கங்கள் பெற்று சாதனை! கஹட்டோவிட்ட வீரர்கள் மூவரும் பதக்கங்களை வென்று அசத்தல்

Rihmy Hakeem
By -
0

 



மலேசியாவில் நடைபெற்ற IFMA MUAY THAI SCHOOL WORLD CHAMPIONSHIP 2026 சர்வதேச முஆய் தாய் சம்பியன்சிப் போட்டியில் இலங்கை அணியினர் 14 தங்கம், 7 வெள்ளி மற்றும் 25 வெண்கலப் பதக்கங்கள் உட்பட 46 பதக்கங்களைப் பெற்று சாதனை படைத்துள்ளனர். 


மேலும், கஹட்டோவிட்ட பிரதேசத்தில் இருந்து சென்று போட்டிகளில் பங்குபற்றிய பாடசாலை மாணவர்களான மொஹம்மத் ஸாதாத் மற்றும் மொஹம்மத் நுவைர் ஆகிய மாணவர்கள் தங்கப் பதக்கங்களை தமதாக்கிக் கொண்டதுடன், மிசாரி வெண்கலப்பதக்கத்தினைப் பெற்றுக்கொண்டார். 


அர்ப்பணிப்புடன் பயிற்சி நாட்டுக்கும் ஊருக்கும் பெருமை சேர்த்த மேற்படி இளம் வீரர்கள், பயிற்றுவிப்பாளர்கள், முஆய் தாய் கழகத்தினர் மற்றும் ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் பலரும் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.




கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)