கஹட்டோவிட்டாவிற்கு மற்றுமொரு பெருமை – முபஸ்ஸிர் முபீத்
கஹட்டோவிட்டாவைச் சேர்ந்த முபஸ்ஸிர் முபீத், இலங்கை இராணுவத்தில் இணைந்து தனது முறையான அடிப்படை இராணுவப் பயிற்சியை (Proper Military Training) வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளார்.
பூஸ்ஸ இராணுவ முகாமில் (Boossa Camp) நடைபெற்ற பயிற்சிக் காலத்தில், கடுமையான உடற்பயிற்சிகள், இராணுவ ஒழுக்கம், அணிவகுப்பு பயிற்சிகள், மன உறுதி மற்றும் பல்வேறு இராணுவத் திறன்களை கற்றுத் தேர்ச்சி பெற்றுள்ளார்.
இது ஒரு சாதாரண சாதனை அல்ல.
தன்னம்பிக்கை, விடாமுயற்சி, கட்டுப்பாடு மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவற்றின் மூலம் அடைந்த ஒரு முக்கியமான வெற்றியாகும்.
இராணுவப் பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்து, நாட்டிற்கு சேவையாற்றும் பாதையில் காலடி எடுத்து வைத்துள்ள முபஸ்ஸிருக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
நன்றி - கஹட்டோவிட்ட நியூஸ் பேஜ் ஒபீசியல்

