அரசாங்க தகவல் திணைக்களத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற தமிழ் மொழியில் அறிக்கையிடும் ஊடகவியலாளர்களுக்கான செயலமர்வு (படங்கள்)

Rihmy Hakeem
By -
0


தமிழ் மொழியில் ஊடக அறிக்கையிடலை மேற்கொள்ளும் ஊடகவியலாளர்களுக்கான பயிற்சி செயலமர்வொன்று இன்றைய தினம் (03) அரசாங்க தகவல் திணைக்களத்தின் ஏற்பாட்டில் அதன் புதிய கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. 


நவீன ஊடகங்களில் செயற்கை நுண்ணறிவின் பயன்பாடு தொடர்பில் தமிழ்மொழியில் ஊடக அறிக்கையிடலை மேற்கொள்ளும் ஊடகவியலாளர்களை அறிவுறுத்தும் நோக்கத்தில் இச்செயலமர்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.


இச்செயலமர்வு அரசாங்க தகவல் பணிப்பாளர் நாயகம் திரு. எச்.எஸ்.கே.ஜே. பண்டாரவின் வழிகாட்டலில் இடம்பெற்றதுடன், மேலதிக தகவல் பணிப்பாளர் நாயகம் - திரு. வை. பரன்தாமன், உதவிப் பணிப்பாளர் - திரு. எல்.பி. திலகரத்ன ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.


வளவாளராக ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவரும், விடிவெள்ளி பத்திரிகையின் பிரதம ஆசிரியருமான  எம்.பி.எம். பைரூஸ் அவர்கள் கலந்து கொண்டதுடன், பல்வேறு ஊடகங்களைச் சேர்ந்த ஊடகவியலாளர்கள் பலரும் கலந்து பயன்பெற்றமை சிறப்பம்சமாகும்.









கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)