இலங்கையில் இன்று (31) ஐந்து கொவிட் மரணங்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார். இதனையொடுத்து மொத்த கொவிட் மரணங்களின் எண்ணிக்கை 204 ஆக உயர்வடைந்துள்ளது.

இன்று பதிவான மரணங்களின் விபரம்:

  1. தர்கா நகரை சேர்ந்த 72 வயதான ஆண் ஒருவர் களுத்துறை பெரிய வைத்தியசாலையில் கடந்த 28 ஆம் திகதி மரணித்துள்ளார்.
  2. ஹோமாகம பிரதேசத்தை சேர்ந்த 59 வயதான ஆண் ஒருவர் இன்று ஐடிஎச் இல் (31) மரணித்துள்ளார்
  3. கொழும்பு 05 இனை சேர்ந்த 61 வயதான பெண் ஒருவர் ஐடிஎச் இல் (31) மரணித்துள்ளார்.
  4. கலேவல பிரதேசத்தை சேர்ந்த 46 வயதுடைய ஆண் ஒருவர் கலேவல வைத்தியசாலையில் (30) மரணித்துள்ளார்.
  5. பெல்மதுல்லை பிரதேசத்தை சேர்ந்த 75 வயதான ஆண் ஒருவர் இரத்தினபுரி வைத்தியசாலையில் (30) மரணித்துள்ளார்.


 


இலங்கையில் கொரோனா வைரசினால் உயிரிழந்த அனைவரினதும் உடல்களையும் அவர்களது மத நம்பிக்கைக்கு அப்பால் தகனம் செய்யவேண்டும் என்ற இலங்கை அரசாங்கத்தின் கொள்கைக்கு எதிராக பிரித்தானியாவின் முஸ்லீம் கவுன்சில் சட்டநடவடிக்கைகளை எடுக்கவுள்ளது.

கொரோனா வைரஸ் காரணமாக உயிரிழந்தவர்களின் உடல்களை தகனம் செய்யவேண்டும் என்ற வற்புறுத்தல் நாட்டின் முஸ்லீம் சிறுபான்மையினத்தவர்கள் மத்தியில் கடும் மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா வைரசினால் உயிரிழந்தவர்களை அடக்கம் செய்யலாம் அல்லது தகனம் செய்யலாம் என உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.

எனினும் இலங்கை அரசாங்கம் கட்டாய தகனம் என்ற கொள்கையை மார்ச் மாதத்தில் பின்பற்ற தொடங்கியது.

இந்த மாதம் கொரோனாவினால் உயிரிழந்த 20 நாள் குழந்தையின் உடலை அதிகாரிகள் குடும்பத்தினரின் விருப்பமின்றி தகனம் செய்தனர்.

குழந்தையின் தந்தை தன்னால் அதனை பார்க்கமுடியவில்லை என தெரிவித்தார்.

அவர்கள் எனது குழந்தையை எரிக்கும் இடத்திற்கு என்னால் செல்ல முடியாது என அல்ஜசீராவிற்கு தெரிவித்த எம்எவ்ம் பாஹிம் பெற்றோர் சம்மதம் வழங்காத நிலையில் எப்படி குழந்தையை தகனம் செய்தீர்கள் என எனது குடும்பத்தவர்களும் நண்பர்களும் அதிகாரிகளிடம் குரல் கேள்வி கேட்டனர் என தெரிவித்துள்ளார்.

பிரித்தானிய முஸ்லீம் கவுன்சில் நியமித்துள்ள செயலணியொன்று உடல்களை பலவந்தமாக தகனம் செய்யும் கொள்கையை இலங்கை கைவிடவேண்டும் என கோரி இலங்கைக்கான உயர்ஸ்தானிகருக்கு கடிதமொன்றை எழுதியுள்ளது.

இதன் காரணமாக முஸ்லீம் கிறிஸ்தவர்களுக்கு ஏற்படும் பாதிப்பு குறித்தும் அந்த கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளது.

இந்த வன்முறையை முடிவிற்கு கொண்டுவருவதற்காக அவசியமான சட்டநடவடிக்கையை எடுக்கப்போவதாக முஸ்லீம் பேரவை தெரிவித்துள்ளது.

இலங்கையில் முஸ்லீம்களின் உடல் கட்டாயமாக தகனம் செய்யப்படுவது சிறுபான்மை இனத்தின் மத உரிமைகளை மோசமாக பாதிக்கும் செயல் என குறிப்பிட்டுள்ள பின்ட்மன்ஸ் என்ற சட்டநிறுவனத்தின் டயாப் அலி இது உரிய காரணமில்லாத பட்சத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்வதற்காக குடும்பத்தினரிடம் வழங்குவதை தாமதப்படுத்துவது பாரதூரமான உரிமை மீறல் என குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா வைரஸ் தருணத்தில் உடல்களை பாதுகாப்பாக அப்புறப்படுத்துவது குறித்த உலக சுகாதார ஸ்தாபனத்தின் பரிந்துரைகளை எந்த காரணமுமின்றி இலங்கை அதிகாரிகள் மீறிவிட்டனர் என அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கு அப்பால் இலங்கையின் உச்சநீதிமன்றத்தின் வேகமாக காரணமற்ற மனு நிராகரிப்பு உள்நாட்டில் இந்த விவகாரத்திற்கு தீர்வை காண்பதற்கான வழியெதுவும் இல்லாத நிலையை உருவாக்கியுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


Sources 

Sources 2

 


ரீ.எல்.ஜவ்பர்கான்

காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவு இன்று(31) முதல் எதிர்வரும் ஐந்து தினங்களுக்கு முடக்கப்பட்டுள்ளதாக,  மட்டக்களப்பு மாவட்ட  அரசாங்க அதிபர் கே. கருனாகரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு நகர் பகுதியில் உள்ள வர்த்தக நிலையங்களில் கடமையாற்றும் ஊழியர்கள் மற்றும் உரிமையாளர் களுக்கு நேற்று(30) மேற்கொள்ளப்பட்ட 549 ரபிட் அன்டிஜன் பரிசோதனையின்போது, 26 பேர் கொரோனா தொற்றாளர்களாக கண்டறியப்பட்டுள்ளனர்.

இவர்களில் காத்தான்குடி பிரதேசத்தைச் சேர்ந்த 23 நபர்களும், ஆரையம்பதி பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரும்,  மட்டக்களப்பு பிரதேசத்தைச் சேர்ந்த இருவரும் இனங்காணப்பட்டுள்ளனர்.

மேலும் காத்தான்குடி பிரதேசத்தின் பல பாகங்களிலும் மேற்கொள்ளப்பட்ட 665 ரபிட் அன்டிஜன் பரிசோதனைகளின்போது 27 நபர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். 

 


ஊடகவியலாளர்களுக்கு தற்போது வழங்கப்பட்டுள்ள ஊடக அடையாள அட்டையின் செல்லுபடியான காலம் 2021 மார்ச் மாதம் 31 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக அரசாங்க தகவல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் நாலக கலுவெ வ வினால் விடுக்கப்பட்டுள்ள ஊடக அறிக்கை பின்வருமாறு:

ஊடக அடையாள அட்டையின் செல்லுபடியான காலத்தை 2021 மார்ச் மாதம் 31 ஆம் திகதி வரையில் நீடித்தல்
2021 ஆம் ஆண்டுக்கான ஊடக அடையாள அட்டையை வழங்குவதற்கான அடிப்படை அலுவல்கள் தற்பொழுது ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதற்கமைவாக 2020 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 12 ஆம் திகதி 2205ஃ17 இலக்கத்தின் கீழான அதிவிசேட வர்த்தமானி அறிவிப்பு மற்றும் சம்பந்தப்பட்ட விண்ணப்பத்திரம் தற்பொழுது வெளியிடப்பட்டுள்ளது. இந்த விண்ணப்ப படிவத்தை றறற.னபi.பழஎ.டம என்ற அரசாங்க தகவல் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் அல்லது றறற.நெறள.டம என்ற இணையத்தளத்தில் பதிவிறக்கம் (னழறடெழயன) செய்துகொள்ள முடியும்.

இதே போன்று 2020 ஆம் ஆண்டுக்காக வழங்கப்பட்டுள்ள ஊடக அடையாள அட்டையின் செல்லுபடியான காலம் 2020 டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி தொடக்கம் 2021 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டிருப்பதாக மேலும் அறிவிக்கின்றோம்.

நாலக கலுவெவ
அரசாங்க தகவல் திணைக்கள பணிப்பாளர் நாயகம்




 நாட்டில் சகல வசதிகளுடன் கூடிய ஆயிரம் தேசிய பாடசாலைகளை அமைக்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதன் ஆரம்ப வைபவம் கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல் பீரிஸ் தலைமையில் கோட்டை ஸ்ரீ ஜயவர்தனபுர கல்லூரியில் நேற்று இடம்பெற்றது.

வேலைத்திட்டத்தின் முதல் பாடசாலையாக சுமார் 200 வருடங்கள் பழைமைவாய்ந்த இந்த கல்லூரி தெரிவு செய்யப்பட்டுள்ளது.  மாணவர்களுக்கு முழுமையான கல்வியை வழங்கும் விடயத்தில் கணினி தொழில்நுட்பம், தகவல் தொழில்நுட்பம், மொழிக்கல்வி உள்ளிட்ட வசதிகள் விருத்தி செய்யப்பட வேண்டும் என அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

நாட்டில் அமைக்கப்படும் புதிய தேசிய பாடசாலைகள் இந்த அனைத்து வசதிகளையும் வழங்கும் என அவர் குறிப்பிட்டார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் வழிகாட்டலின் கீழ், ஆயிரம் தேசிய பாடசாலைகளை அமைக்கும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. பல கட்டங்களாக இந்த செயற்றிட்டம் முன்னெடுக்கப்படும். முதலாம் கட்டத்தில் 123 பாடசாலைகளும், இரண்டாம் கட்டத்தில் 673 பாடசாலைகளும் தேசிய பாடசாலைகளாக அபிவிருத்தி செய்யப்படும் என கல்வி அமைச்சர் மேலும் தெரிவித்தார்.



 மட்டக்களப்பு கோரளைப்பற்று தெற்கு பிரதேச செயலகபிரிவிற்குட்பட்ட சந்திவெளி பாலையடித்தோனா கிராமத்தில் உள்ள 65 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்து உள்ளதாக அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமான கணபதிப்பிள்ளை கருணாகரன் தெரிவித்தார்.

சேதமடைந்துள்ள வீடுகளை முழுமையாக புனரமைப்பு செய்வதற்கான நடவடிக்கையினை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவினர் முன்னெடுத்து வருகின்றனர். இதற்கான மதிப்பீட்டு அறிக்கையினை பெற்று நட்ட ஈட்டினை வழங்குவதற்கான நடவடிக்கையினை மிகவும் தீவிரமாக செய்து வருகின்றனர்.

நட்புறவு கிராமத்தில் கடந்த 28 ஆம் திகதி பெய்த கடும் சுழி காற்றுடன் கூடிய மழை இரவு 9 மணி முதல் 15 நிமிடங்களுக்கு தொடர்ச்சியாக வீசியதன் காரணமாக பகுதியளவில் 65 வீடுகள் கோரளைப்பற்று தெற்கு பிரதேச செயலகபிரிவிலும் கோரளைப்பற்று பிரதேச செயலகபிரிவின் கும்புறுமுலை கிராமத்தில் 2 வீடுகளும் சேதமடைந்துள்ளன.

சேதமடைந்த வீடுகளுக்கான நட்டஈடு வழங்கும் நடவடிக்கையில் மாவட்ட செயலகமும் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவினரும் இணைந்து பிரதேச செயலகங்களுக்கு வழங்க உள்ளதாக அனர்த்த முகாமைத்துவ பிரிவினர் தெரிவித்தனர்.





(எம்.ஆர்.எம்.வஸீம்) 

கொரோனாவினால் மரணிப்பவர்களை அடக்கம் செய்வதால், அதன்மூலம் வைரஸ் பரவுவதை விஞ்ஞான ரீதியில் உறுதிப்படுத்தினால் தகனம் செய்ய வேண்டும் என தெரிவிப்பவர்களின் நிலைப்பாட்டிலேயே நானும் இருப்பேன். ஆனால் தகனம் செய்யவேண்டும் என தெரிவிப்பவர்களின் கருத்தில் எந்த விஞ்ஞான அடிப்படையும் இல்லை. அவர்கள் எடுத்த தீர்மானத்தை கைவிட முடியாத பிரச்சினையே இங்கு உள்ளது என நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.

முஸ்லிம் இளைஞர்கள் அடிப்படைவாதத்துக்கு தள்ளப்படுவார்கள் என தன்னால் தெரிவிக்கப்பட்ட கருத்துத் தொடர்பில் எழுந்திருக்கும் விமர்சனம் குறித்து கருத்துத் தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

இது தொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், எந்தவொரு பிரச்சினையும் பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக் கொள்ள முடியாமல் போவதையே அடிப்படைவாதிகள் எதிர்பார்க்கின்றனர். எந்தவொரு சமூகத்துக்கும் எதிராக அநீதி ஏற்படும்போது அதனை அடிப்படைவாதிகள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்வார்கள் என்ற கருத்திலே கொரேனாவினால் மரணிப்பவர்களை அடக்கம் செய்ய அனுமதி இருந்தும் எமது நாட்டில் அது மறுகக்கப்படும்போது அதனால் பாதிக்கப்படுபவர்கள் அடிப்படைவாதிகளின் கைகளுக்குள் இலகுவில் சிக்கிக் கொள்வார்கள் என தெரிவித்திருந்தேன். அதனை சில ஊடகங்கள் திரிபுபடுத்தி தெரிவித்திருக்கின்றன.

அத்துடன் கொவிட்டில் மரணிப்பவர்களை அடக்கம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்பது முஸ்லிம் மக்களுக்கு மாத்திரமான கோரிக்கையல்ல. உலகில் 195 நாடுகளில் தகனம் செய்யவும் அடக்கம் செய்யவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. உலக சுகாதார அமைப்பும் அதனை அனுமதித்துள்ளது. அதனடிப்படையிலேயே எந்த நிபந்தனையிலாவது அடக்கம் செய்ய கோருபவர்களுக்கு அதற்கான அனுமதியை வழங்க வேண்டும் என்பதே எமது கோரிக்கை. அது முஸ்லிம்களுக்கு மாத்திரம் வழங்க வேண்டும் என யாரும் தெரிவிக்கவில்லை.

அத்துடன் கொவிட்டில் மரணிப்பவர்களை அடக்கம் செய்வதால் அதன் மூலம் வைரஸ் பரவும் என தெரிவிப்பவர்கள் அதனை விஞ்ஞான அடிப்படையில் உறுதிப்படுத்த வேண்டும். அவ்வாறு உறுதிப்படுத்தினால் நானும் அவர்களின் நிலைப்பாட்டிலேயே இருப்பேன். ஆனால் தகனம் செய்ய வேண்டும் என தெரிவிப்பவர்கள் விஞ்ஞான அடிப்படையில் எந்த விடயத்தையும் உறுதிப்படுத்துவதில்லை. ஆனால் அடக்கம் செய்வதால் வைரஸ் நீரில் கலந்து பரவுவதற்கு விஞ்ஞான ரீதியிலான எந்த அடிப்படையும் இல்லை. அது ஒருபோதும் அவ்வாறு ஏற்படாது என வைரஸ் தொடர்பாக விசேட நிபுணர்கள் பலர் தெரிவிக்கின்றனர். அதேபோன்று உலக சுகாதார அமைப்பும் உறுதிப்படுத்தி இருக்கின்றது.

அவ்வாறான நிலையில், இலங்கையில் மாத்திரமே அடக்கம் செய்ய அனுமதி வழங்காத நிலைமை காணப்படுகிறது. அதனால்தான் சுகாதார அமைச்சினால் நியமிக்கப்பட்ட தொழில்நுட்ப குழு இதுதொடர்பில் மீண்டும் ஆராய்ந்து நியாயமான தீர்மானம் ஒன்றை அறிவிக்க வேண்டும் என நாங்கள் கோரியுள்ளோம்

இதில் எந்த பிரச்சினையும் இல்லை. மாறாக நாங்கள் யாரையும் பலவந்தப்படுத்தவில்லை. அத்துடன் அடக்கம் செய்வதால் வைரஸ் பரவும் என்றிருந்தால், இன்று இலகையில் 40,000க்கும் அதிகமான தொற்றாளர்கள் இனம் காணப்பட்டு வைத்தியசாலைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர். அந்தத் தொற்றாளர்களின் உமிழ் நீர், சிறுநீர் மற்றும் இதர தேவைக்களுக்காக பயன்படுத்தும் பொருட்கள் அனைத்தும் மண்ணுடன் கலந்து விடுகின்றன. இவர்களின் கூற்றுப்படி வைத்தியசாலையை சுற்றியுள்ளவர்கள் அனைவருக்கும் தொற்று ஏற்பட வேண்டும்.

எனவே, நாங்கள் உலகில் இல்லாத ஒன்றை கேட்கவில்லை. தகனம் செய்வதற்கு பதிலாக அடக்கம் செய்யவே அனுமதி கேட்கிறோம். அதற்கு உலக சுகாதார அமைப்பும் அனுமது வழங்கியிருப்பதாலே கேட்கின்றோம். அத்துடன் தகனம் செய்ய வேண்டும் என தெரிவித்து தீர்மானம் எடுத்தவர்களுக்கு அதனை கைவிடமுடியாத நிலையிலேயே அதில் பிடிவாதமாக இருக்கின்றனர் என்றார்.


கொவிட்டினால் மரணமடைகின்றவர்களின் பிரேதங்களை எரிப்பதற்கு எதிராக கதைத்து நாட்டிற்குள் இல்லாத ஒன்றை இருப்பதாகக் காட்ட கடும்போக்காளர்களுக்கு தேவையேற்பட்டுள்ளது என்று கிராமிய வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை மற்றும் கட்டிடப் பொருட்கள் தொழில் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் இந்திக அனுருத்த தெரிவித்தார்.

இவ்விடயங்களைத் தமது தர்மத்தின் பிரகாரம் மக்களுக்கு சரியானதைச் சொல்லிக் கொடுக்குமாறு சகல மத தலைவர்களிடமும் நாம் வேண்டிக் கொள்வதுடன் அவ்வாறு செய்வதால் நாட்டில் இல்லாத ஒன்றை இருப்பதாக பாசாங்கு செய்ய அரசியல்வாதிகளுக்கு முடியாது என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

"உங்களுக்கு வீடு - நாட்டிற்கு எதிர்காலம்" தேசிய வீடமைப்புத் திட்டத்தின் கீழ் கம்பஹா மாவட்டத்தில் திவுலப்பிட்டிய பிரதேச செயலகப் பிரிவில் கட்டப்பட்ட 2 புதிய வீடுகளை பொது மக்களுக்கு கையளிக்கும் வைபவத்தில் அண்மையில் கலந்து கொண்டு பேசுகையில் மேற்கண்டவாறு உரையாற்றினார்.

திவுலப்பிட்டிய பிரதேச செயலகப் பிரிவிற்கு மேற்கே கொடிகமுவ மற்றும் திக்லந்த பகுதிகளில் இந்த வீடமைப்புகள் திறக்கப்பட்டன.

அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவின் "சுபீட்சத்தின் நோக்கு" கொள்கைப் பிரகனத்திற்கு ஏற்ப, கெளரவ பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவின் அறிவிறுத்தலின் பேரில் கிராமிய வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை மற்றும் கட்டிடப் பொருட்கள் தொழில் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சினால் " உங்களுக்கு வீடு - நாட்டிற்கு எதிர்காலம்" தேசிய வீடமைப்பு வேலைத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த வேலைத் திட்டம் நாட்டில் உள்ள 14,022 கிராம சேவையாளர் பிரிவுகளையும் உள்ளடக்கியதாகும்.








 




கொழும்பு 12 இலுள்ள உயர்நீதிமன்ற கட்டட வளாகத்தில் கடந்த  டிசெம்பர் 15ஆம் திகதியன்று ஏற்பட்ட தீப்பரவலானது, பற்றவைக்கப்பட்டதன் பின்னர் தூக்கி எறியப்பட்ட சிகரெட் துண்டினால் ஏற்பட்டது என்பதற்கான காரணத்தை, நிராகரிக்க முடியாதென, அரச பகுப்பாய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த தீ பரவலானது, எரிபொருள் அல்லது மின்கசிவால் ஏற்படவில்லை என, அரச பகுப்பாய்வு அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதற்கமைய, நீதிமன்றக் கட்டட வளாகத்தில் கடமையாற்றும் சிற்றூழியர்களில் பலர், குறித்த கட்டட வளாகத்தில் இரகசியமாகப் புகைப்பிடிப்பது, முதற்கட்ட விசாரணைகள் மூலம் உறுதியாகியுள்ளது என்றும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேற்படி தீப்பரவலுக்கு காரணமாக அமைந்த, பற்றவைக்கப்பட்ட சிகரெட் துண்டை வீசிய சிற்றூழியர் யார் என்பது தொடர்பான விசாரணைகள்,  முன்னெடுக்கப்பட்டு வருகின்றன எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்

 


நேற்றைய தினம் (29) கொழும்பில் பெய்த கடுமையான மழை காரணமாக, 50 வயதான ஆண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கொழும்பு 03, கொள்ளுபிட்டி - டுப்லிகேசன் வீதியில் நிர்மாணிக்கப்பட்டு வரும் கட்டடமொன்றில் பணியாற்றி வந்த இவர், குறித்த கட்டடத்தின் கீழ் தளத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்குண்டு உயிரிழந்துள்ளார் என்று கொள்ளுபிட்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று மாலை கீழ்தளம் நீரில் மூழ்கிபோது, அங்கு நித்திரையிலிருந்த பலரும் அங்கிருந்து வெளியேறியுள்ள நிலையிலேயே குறித்த நபர், இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளாரென கொள்ளுபிட்டி பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

 



கொரோனா வைரஸ் தொற்று மற்றும், மகா சங்கத்தினரின் கோரிக்கைகளுக்கு அமையவும் நாட்டில் ஏற்பட்டுள்ள வேறு காரணங்களையும் ஆராய்ந்து பார்த்து, மாகாண சபைத் தேர்தலைப் பிற்போட கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதென, சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

நேற்றுமுன்தினம் (28) நடைபெற்ற கட்சித் தலைவர்களின் கூட்டத்திலேயே மேற்கண்டவாறு தீர்மானிக்கப்பட்டது என, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் நேற்று (29) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர், கொரோனா வைரஸ் தொற்றின் மத்தியில், புதிய தேர்தல் முறையொன்று உருவாக்கப்படும் வரையும் மகா சங்கத்தினரால் முன்வைக்கப்பட்டுள்ள எதிர்ப்பையும் கவனத்தில் எடுத்தே, இத்தீர்மானத்தை எடுத்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

“மாகாண சபைகளை இரத்துச் செய்ய வேண்டுமென்ற எண்ணம் நாட்டுக்குள் காணப்படுகின்றது. சிலர் மாகாண சபை இருக்க வேண்டுமென கூறுகின்றனர். எனினும், மாகாண சபை தேர்தலை, தற்போது நடத்துவது உசிதமானதல்ல” என்பதே ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் நிலைப்பாடு என்றார்.

கொரோனா வைரஸ் தொற்றால், நாட்டில் பொருளாதாரத்துக்குச் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளது. இதுவே, எமது இந்தத் தீர்மானத்துக்கான காரணம் என்றார். அத்துடன், புதிய தேர்தல் முறைமையின் கீழ், தேர்தல் நடத்தப்பட வேண்டுமென்று நாம் காரணங்களை முன்வைத்துள்ளோம். அதேபோல், இந்த அரசாங்கத்துக்குத் தேவையான குழுக்களும் மகா சங்கத்தினரும் தேர்தலை பிற்போடுமாறு அழுத்தம் விடுப்பதாகவும் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

எனவே, மேற்கூறப்பட்ட அனைத்துக் காரணங்கள் குறித்து, கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டமைக்கு அமைவாக, இறுதித் தீர்மானமாக மாகாண சபைத் தேர்தலைக் காலவரையறையின்றிப் பிற்போடத் தீர்மானிக்கப்பட்டது என்றார்.

மாகாண சபைத் தேர்தலை இரத்துச் செய்வது இலகுவான காரியமல்ல. மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படாவிட்டாலும் மாகாண சபைகள் செயற்பாட்டிலேயே உள்ளன. மாகாண சபைகள் உருவாகுவதற்குக் காரணமான அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தின் கீழ், உலகில் சில நாடுகள் அந்தத் திசையை நோக்கிப் பார்த்துக்கொண்டிருக்கின்றன. இலங்கையானது உலகத்துக்குள்ளே உள்ளதே அன்றி, உலகம் இலங்கைக்குள் இல்லை. எனவே, நாம் உலகை மறந்து தீர்மானங்களை எடுக்க முடியாது. எனவே, மாகாண சபையை ஒழிப்பதாகக் கூறி, புதிய யுத்தம் ஒன்றை ஆரம்பிக்கத் தேவையில்லை என்றார்.

அதேபோல், பொதுஜன பெரமுனவில் பின்வரிசையில் உள்ள பலர், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை எந்தநாளும் விமர்சிக்கின்றனர்; அவமானப்படுத்துகின்றனர். குற்றம் சுமத்துவதுடன், எமது தேசிய ஒருங்கிணைப்பாளர்களைப் புறக்கணிக்கின்றனர். நாம் இதுதொடர்பிலும் நேற்றைய கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் சுட்டிக்காட்டினோம். ஆனால் பொதுஜன பெரமுனவில் உள்ள உயர்மட்டத் தலைவர்கள், எப்போதும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை அவமதிக்கும் வகையில் செயற்படுவதில்லை என்றார்.

அவர்கள் அனைவரும் எமது கட்சியை மதிக்கின்றனர். சில மாவட்டங்களில் முதலாம் வாக்குகளால் முதலிடத்துக்கு வரவிருந்து 4ஆம் இடத்துக்கு வந்தவர்களே இவ்வாறு விமர்சனங்களை முன்வைக்கின்றனர். இதனால் எமக்கு ஏமாற்றம் இல்லை. அவர்களுக்குத் தான் ஏமாற்றம் என்றார்.

அத்துடன் இந்த விடயம் குறித்து, ஜனாதிபதி, பிரதமர், கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பசில் ராஜபக்‌ஷவின் கவனத்துக்குக் கொண்டு வந்ததுடன், அவர்களும் இதற்குத் தீர்வைப் பெற்றுத் தருவதாக உறுதியளித்ததாக, அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

 


மேல் மாகாணத்திலிருந்து வெளியிடங்களுக்கு செல்வதற்கான 11 இடங்களில் மேற்கொள்ளப்பட்ட உடனடி என்டிஜன் பரிசோதனைகளில் மேலும் 13 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, டிசம்பர் மாதம் 18 ஆம் திகதி தொடக்கம் இதுவரை 10,986 பரிசோதனைகளில் 74 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அதேபோல் குறித்த தொற்றாளர்களுடன் தொடர்பில் இருந்த 377 பேர் இனங்காணப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்தார்

மேலும் நேற்று முன்தினம் 1,359 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் போது மேலும் 07 கொவிட் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

அவர்களுடன் தொடர்பு பட்ட 315 பேர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். இந்த உடனடி ஆன்டிஜன் பரிசோதனைகள் எதிர்வரும் ஜனவரி 05ஆம் திகதி வரைக்கும் மேற்கொள்ளப்படும் என பொலிசார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தகக்கது.

அததெரண

 


யாழ்ப்பாணம் மாநகர சபையின் புதிய முதல்வராக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

யாழ்.மாநகர சபையின் முதல்வரை தெரிவுசெய்யும் விசேட அமர்வு வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் பற்றிக் நிரஞ்சன் தலைமையில் இன்று (30) இடம்பெற்றது.

முதல்வர் வேட்பாளர்களாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் முன்னாள் முதல்வர் இ.ஆனல்ட்டும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி சார்பில் சட்டத்தரணி வி.மணிவண்ணனும் முன்மொழியப்பட்டனர்.

தொடர்ந்து வாக்கெடுப்பு பகிரங்கமாக நடைபெறுவதா அல்லது இரகசியமாக நடைபெறுவதா என உறுப்பினர்களிடத்தில் வாக்கெடுப்பு இடம்பெற்றது.

சபை உறுப்பினர் அனைவரும் பகிரங்க வாக்கெடுப்பு கோரியதால், முதல்வர் தெரிவு பகிரங்க வாக்கெடுப்பு மூலம் இடம்பெற்றது.

வாக்கெடுப்பில் இ.ஆனல்ட்டுக்கு 20 வாக்குகளும், வி.மணிவண்ணனுக்கு 21 வாக்குகளும் கிடைத்துள்ளன.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 15 உறுப்பினர்கள், ஐக்கிய தேசியக் கட்சியின் 3 உறுப்பினர்கள், தமிழர் விடுதலைக் கூட்டணி மற்றும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலா ஒரு உறுப்பினர் என 20 உறுப்பினர்கள் இ.ஆனல்ட்டுக்கு ஆதரவாக வாக்களியுள்ளனர்.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் 10 உறுப்பினர்கள், ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் 10 உறுப்பினர்கள், சிறிலங்கா சுதந்திர கட்சியின் ஒரு உறுப்பினர் என 21 உறுப்பிர்கள் வி.மணிவண்ணனுக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர்.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் 3 உறுப்பினர்கள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒரு உறுப்பினர் என 4 உறுப்பினர்கள் நடுநிலை வகித்துள்ளனர்.

இதனால் யாழ் மாநகர சபையின் புதிய முதல்வராக சட்டத்தரணி வி.மணிவண்ணன் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக, வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் பற்றிக் நிரஞ்சன் அறிவித்துள்ளார்.

கடந்த 16 ஆம் திகதி யாழ்.மாநகர சபையின் வரவு செலவுத் திட்டம் இரண்டாவது தடவையாகவும் சமர்பிக்கப்பட்டு தோற்கடிக்கப்பட்டதால் மாநகர முதல்வர் இ.ஆனல்ட் தனது பதவியை இழந்திருந்தார்.

இதனால் புதிய முதல்வரை தேர்வு செய்யும் விசேட அமர்பு இன்று இடம்பெற்ற போதே வி.மணிவண்ணன் முதல்வராக தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


 





கொவிட் மரண உடல்களை அடக்கம் செய்வதா? தகனம் செய்வதா? என்பது தொடர்பில் புதிதாக நியமிக்கப்பட்ட நிபுணர்கள் குழுவின் அறிக்கை நேற்றைய தினம் (29) சுகாதார அமைச்சிடம் கையளிக்கப்பட்டுள்ள நிலையில், அது தொடர்பில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் ஸெய்யித் அலி ஸாஹிர் மௌலானா சமூக வலைத்தளங்களில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

நியமனம் செய்யப்பட்ட புதிய நிபுணர்கள் குழுவின்  தலைவர் பேராசிரியர் ஜெனிபர் பெரேராவின் கூற்றுப்படி, தகனம் மற்றும் அடக்கம் தொடர்பான நிபுணர் குழு அறிக்கை சுகாதார அமைச்சின் செயலாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையானது நாளை (30) ஜனாதிபதியிடம் ஒப்படைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையானது முற்றிலும் அறிவியலை அடிப்படையாகக் கொண்டதாக அமைந்திருந்தால் நாங்கள் அதை ஏற்றுக்கொள்வோம்!

 நிபுணர்களின் பரிந்துரைகளின் பேரில் செயல்படுவோம் என அரசாங்கம்  ஏற்கனவே  அளித்த வாக்குறுதியின் பிரகாரம் இதை நடைமுறைப்படுத்துமாறு  கேட்டுக் கொள்கிறேன்.

பொதுமக்களின் நம்பிக்கையைப் பெற்றுக் கொள்ளும் பொருட்டு குறித்த  அறிக்கை மக்களது பார்வைக்காக வெளிப்படையாக முன் வைக்கப்படும் என்றும் எதிர்பார்க்கிறேன். 

வேதனைக்குள்ளான சமூகத்திற்கும் ,  பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கும் ஆறுதல் அளிக்கும் வகையிலும் , ஒரு முழு நாட்டின் சுதந்திரத்தை வெளிக்காட்டும் வகையிலும் இறைவன் உதவியால் ஒரு சாதகமான முடிவு கிடைக்க வேண்டும் என நான் உளமாற பிரார்த்திக்கிறேன்... ஆமீன்! இன்ஷா அல்லாஹ்!

Update:

மேற்படி குழுவின்  அறிக்கை மீளாய்வு செய்யப்பட்டு இறுதி தீர்மானம் எடுக்கப்படும் வரை, கொரோனா தொற்றால் உயிரிழப்போரின் சடலங்கள் தகனம் செய்யப்படுமென, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.

 இன்றைய தினம் (29) ஒரு கொவிட் மரணம் பதிவாகியுள்ளதுடன் 453 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஊடக அறிக்கைகள்:




 


மாவனெல்லை, ஹிங்குல பிரதேசத்திலுள்ள தெடிமுன்ட தேவாலயத்திற்கு முன்பாக உள்ள புத்தர் சிலைக்கு கல் வீச்சு மேற்கொள்ளப்பட்டதாகவும், அதன் கண்ணாடி உடைந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ள நிலையில் தற்போது மாவனெல்லை நகரத்திற்கு பொலிஸ் விசேட அதிரப்படை வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

மேலும் அங்கு இராணுவத்தினரும் வரவழைக்கப்பட்டுள்ளதாகவும், சம்பவம் தொடர்பில் மாவனெல்லை பொலிஸ் உட்பட பல்வேறு பொலிஸ் குழுக்கள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

குறித்த தேவாலயத்திற்கு முன்பாகவுள்ள புத்தர் சிலையின் கண்ணாடி உடைக்கப்பட்டுள்ளதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலை அடுத்தே ஹிங்குல மற்றும் மாவனெல்லை நகரங்களுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 

எனினும் சிலைக்கு எவ்வித சேதங்களும் ஏற்படவில்லையெனவும், உடைந்த கண்ணாடியை மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 



Source 

 


2021 முதல் அரச ஊழியர்கள் வாரத்தில் ஒரு நாளாவது பத்திக் ஆடையை அணிந்து, கடமைகளுக்கு சமூகமளிக்குமாறு, பத்திக் கைத்தொழில் மற்றும் தேசிய ஆடை உற்பத்தி இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர அரச பணியாளர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

தேசிய ஆடை உற்பத்தியைப் பாதுகாத்தல், தேசிய ஆடைத்துறையில் புதிய தொழில்வாய்ப்பு தலைமுறை மற்றும் ஆடைகளுக்காக வருடாந்தம் வெளிநாடுகளுக்குச் செல்லும் உள்ளுர் பரிமாற்றத்தை தடுக்கும் நோக்கில் இந்தக் கோரிக்கையை விடுப்பதாக இராஜாங்க அமைச்சர் தயாசிறி தெரிவித்துள்ளார்.

அதற்கமைய, அரச பணிகளில் ஈடுபட்டுள்ள 3 மில்லியனுக்கும் அதிகமானவர்களின் ஒத்துழைப்பை இதற்காக வழங்குமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

 


(எம்.மனோசித்ரா)

ஐரோப்பிய நாடுகளில் மாத்திரமின்றி ஆபிரிக்கா , மத்திய கிழக்கு மற்றும் ஆசிய நாடுகள் சிலவற்றிலும் புதிய வகை வைரஸ் பெருமளவில் இனங்காணப்பட்டுள்ளது.எனவே இதன் பாதிப்பிலிருந்து நாம் தப்பித்துக் கொள்வதற்கான வாய்ப்பு மிகக் குறைவானதாகும். இவ்வாறான நிலைமைக்கு மத்தியில் இலங்கையில் மேலும் கடுமையான சுகாதார பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஹரித அலுத்கே தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில் ,எவ்வாறான புதிய வகை வைரஸ் தோன்றினாலும் அடிப்படை சுகாதார விதிமுறைகளை முறையாக பின்பற்றினால் அவற்றிலிருந்தும் எம்மை பாதுகாத்துக் கொள்ள முடியும்.புதிய வகை வைரஸ் இளைஞர் மத்தியிலேயே தீவிரமாகப் பரவலடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. அத்தோடு வேறு நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் அபாயம் அதிகமாகும்.இலங்கையில், தொற்றுக்குள்ளானோரில் 80 சதவீதமானோர் குணமடைந்துள்ளனர். ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும் போது எமது நாட்டில் மரணங்களின் எண்ணிக்கை குறைவாகும். 

எனினும் கொழும்பு மாவட்டத்தில் வைரஸ் பரவல் கொழும்பு மாநகர சபையிலேயே மையம் கொண்டிருந்தது.எனினும், தற்போது அவிசாவளை போன்ற பகுதிகளிலும் அதிகளவான தொற்றாளர்கள் இனங்காணப்படுவதிலிருந்து கொழும்பு மாநகர சபையில் காணப்பட்ட அபாயம் ஏனைய பகுதிகளுக்கு பரவியுள்ளமை தெளிவாகியுள்ளது.

எனவே, ஏனைய பகுதிகள் தொடர்பில் எப்போதும் அவதானமாக இருக்க வேண்டியது அத்தியாவசியமானதாகும். எனினும் தற்போது அட்டலுகம குறித்து தொற்று நோயியல் பிரிவு எந்த கருத்தையும் தெரிவிப்பதில்லை. அங்கு பி.சி.ஆர். பரிசோதனைகள் முன்னெடுக்கப்படுகின்றனவா இல்லையா என்பதும் தெளிவில்லை. இவ்வாறு பொறுப்பற்று செயற்படுவது மேலும் அபாய நிலைக்கே நாட்டை இட்டுச் செல்லும். எவ்வாறிருப்பினும் இவ்வாறான நிலைமைகளிலிருந்து நாட்டை மீட்பதற்கு மக்களின் முழுமையான ஒத்துழைப்பே அத்தியாவசியமானதாகும் என்றார்.

 


இந்த தசாப்தத்தின் சிறந்த ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் வீரராக இந்திய கிரிக்கட் அணியின் தலைவர் விராட் கொஹ்லி தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இந்தத் தசாப்தத்தின் சிறந்த டெஸ்ட் வீரராக அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த ஸ்டீவ் ஸ்மித்தும், கடந்த பத்து ஆண்டுகளில் சிறந்த ரி-20 வீரராக ஆப்கானிஸ்தான் அணியைச் சேர்ந்த ரஷீட்கானும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இந்தத் தசாப்தத்தின் சர்வதேச கிரிக்கெட் பேரவையின் சிறந்த உயிர்ப்புமிக்க வீரருக்கான விருது மஹேந்ரசிங் டோனிக்கு வழங்கப்பட்டிருக்கிறது. சர்வதேச கிரிக்கெட் பேரவை இந்தத் தெரிவை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முழு விபரம் : https://www.icc-cricket.com/media-releases/1956755

 


இக்பால் அலி

ரம்புக்கன- கொத்தனவத்த கிராம சேவைப் பிரிவில் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தவரின் குடும்பத்தில், மேலும் மூவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

உயிரிழந்த 75 வயதுடைய நபரின் மகன், மகள் மற்றும் 15வயதுடைய சிறுவன் ஆகியோரே தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அத்துடன், அருகில் வசிக்கும் பாடசாலை மாணவர்கள் இருவருக்கும் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக, பொதுச் சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்தனர்.

இதனையடுத்து இவர்கள் அனைவரும் உந்துகொட சிகிச்சை  நிலையத்துக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.

 


நவி

கொரோனா அச்சம் காரணமாக கம்பளை நகரில் 100 இற்கும் மேற்பட்ட வர்த்தக நிலையங்கள் இன்று முதல் (29) மூடப்பட்டுள்ளன.

மேற்படி வர்த்தக நிலையங்களுக்கு வியாபார நிமித்தம் வந்துசென்ற பிஸ்கட் கம்பனியொன்றின் விற்பனை முகவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. அதனையடுத்தே, அந்த பிரதிநிதி வந்துச் சென்றதாக தெரிவிக்கப்படும் வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.

அவ்வாறு இனங்காணப்பட்ட வர்த்தக நிலையங்களின் உரிமையாளர்களும், அங்கு தொழில் புரிந்தவர்களும் சுய தனிமைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

பிஸ்கட் கம்பனியின் விற்பனை முகவர் காய்ச்சல் காரணமாக கடந்த 24 ஆம் திகதி கம்பளை வைத்தியசாலைக்கு சென்றுள்ளார். இதன்போது எழுமாறாக அவருக்கு பிசிஆர் பரிசோதனை நடத்தப்பட்டது.

பரிசோதனை முடிவுகள் 26 ஆம் திகதி வெளியாகின.  கம்பளை, பகுதியைச் சேர்ந்த 29 வயதான விற்பனை முகவருக்கு வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையிலேயே குறித்த விற்பனை முகவர், வியாபாரம் நிமித்தம் வந்துசென்ற வியாபார நிலையங்கள் இழுத்து மூடப்பட்டுள்ளன. 

கம்பளை நகரப்பகுதியில் கொரோனா வைரஸ் அண்மைக்காலமாக வேகமாக பரவிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 இன்று (28) 03 கொவிட் மரணங்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து நாட்டில் இதுவரை பதிவாகியுள்ள கொவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 194 ஆக உயர்வடைந்துள்ளது.



இன்று (28) மேலும் 164 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இன்று இதுவரை 530 கொவிட் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.



 

வாழ்வாதாரத்தை இழந்த மீனவர்கள்...

மீனவர்களின் வாழ்க்கையானது ஒவ்வொரு சூழ்நிலையிலும் அச்சத்திலும்,ஆபத்தும் சூழ்ந்தவையாகவே காணப்படுகின்றது.எதையும் சிரமமாகக் கருதாமல் புயல் ,மழை,கடல் சீற்றத்தோடு வாழ்க்கையை வாழ்வதற்காக எதிர்நீச்சல் போட்டுக் கொண்டிருக்கிறார்கள் .ஆனால் கரையில் இருப்பவர்களுக்கு அவர்களின் போராட்டத்தின் வலியை உணரமுடியாது.மீனவர்களின் குடும்பங்களோ கடலுக்குப் போனவர்கள் திரும்பி வரும் வரை கண்ணீரும் கம்பலையுமாக இருப்பதுதான் இன்றைய யதார்த்த சூழ்நிலையாகும்.

இலங்கையில் கொரோனா தொற்று மீண்டும் வேகமாக பரவி வருகின்ற இக் காலகட்டத்தில் பல்வேறு துறைகளிலும் பாரிய வீழ்ச்சியை அவதானித்து வருகின்றோம்.முதலாவது அலை,இரண்டாவது அலையென கட்டம் கட்டமாக கொரோனாவின் தாக்கம் ஊடுறுவதை காணமுடிகின்றது.முதலாவது அலையின் போது கடற்படை மற்றும் கந்தகாடு மறுவாழ்வு நிலையத்திலுள்ளவர்கள் மற்றும் அவர்களோடு சார்ந்தவர்கள் பாதிக்கப்பட்டிருந்தனர்.அதே போன்று இரண்டாவது அலையில் ஆடைத் தொழிற்சாலையை சேர்ந்தவர்கள்,மீன் விற்பனையாளர்கள் ,பொலீஸார் ,ஊடகவியலாளர்கள் என பல் துறை சார்ந்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதை அவதானிக்க முடிகின்றது.மினுவங்கொடை ஆடைத் தொழிற்சாலையில் ஏற்பட்ட கொவிட் கொத்தணி பின்னர் பேலியகொட மீன் சந்தையிற்கு பரவியிருந்தது இந்நிலையில் ,மினுவங்கொடை மற்றும் பேலியகொட கொவிட் கொத்தணிகளின் ஊடாக இதுவரை சுமார் 6000த்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக கொவிட் 19 ஒழிப்பிற்கான தேசிய செயற்பாட்டு மையம் அறிவித்திருந்தது.இந்த நிலையின் பின்னர் மக்கள் மீன்கள் என்றாலே அச்சப்பட்டு ஒதுங்கும் நிலையை நம் கண்ணூடாகவே காணமுடிந்தது.இதற்குக் காரணம் நாட்டில் பெரும்பாலான பகுதிகளில் மீன் விற்பனையாளர்களுக்கு கொவிட் தொற்று ஏற்பட்டமை அண்மைக்காலமாக உறுதிப்படுத்தப்பட்டு வருகின்றது .கடற்றொழிலாளர்கள் மற்றும் மீனவர்கள் மத்தியில் கொவிட் தொற்று பரவி வருகின்றமையினால் நாட்டு மக்கள் மீன்களை கொள்வனவு செய்வதை குறைத்துக் கொண்டுள்ளனர்.இந் நிலையில் மீனவர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.



பேலியகொட மீன் சந்தையிலிருந்தே நாடு முழுவதும் மீன்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன.இந்த நிலையில் நாட்டில் பெரும்பாலான பகுதிகளில் மீன் விற்பனையாளர்களுக்கு கொவிட் தொற்று ஏற்பட்டமை அண்மைக்காலமாக உறுதிப்படுத்தப்பட்டு வருகின்றது.இதனால் மீன்பிடித்துறை முற்றாக பாதிக்கப்பட்டுள்ளதை அவதானிக்க முடிகின்றது.கடற்றொழில் மற்றும் நீரியல்வள திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தின் பிரகாரம்,இலங்கையில் சுமார் 20 இலட்சம் பேர் கடற்றொழிலை நேரடியாகவும்,மறைமுகமாகவும் நம்பி வாழ்ந்து வருகின்றனர்.அத்துடன் கடற்றொழில் மற்றும் நீரியல்வள திணைக்களத்தின் 2018  ஆம் ஆண்டு செயலணி அறிக்கையின் படி ,அந்த ஆண்டின் மொத்த மீன் உற்பத்தி 527,060 மெட்ரிக் தொன் ஆக காணப்படுகின்றது.அத்தோடு 2018 ஆம் ஆண்டு 1.2% கடற்றொழிலினால் தலா தேசிய உற்பத்திக்கு பங்களிப்பு வழங்கப்பட்டுள்ளது.மத்திய வங்கியின் 2019 ம் ஆண்டு அறிக்கையின் பிரகாரம் கடற்றொழில் துறையின் ஊடாக நாட்டின் தலா தேசிய உற்பத்திக்கு 11 வீதம் பங்களிப்பு செய்யப்பட்டுள்ளது.மீனவர்கள் மத்தியில் மூன்று விதத்தில் இந்த தொற்று பரவுவதற்கான அபாயம் ஏற்கனவே காணப்பட்டதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.இந்தியாவில் கொரோனா தொற்று அதிகளவில் காணப்பட்ட நிலையில் ,இந்திய மீனவர்களின் ஊடாக  நாட்டிற்குள் கொரோனா தொற்று பரவுவதற்கான அபாயம் ஏற்கனவே காணப்பட்டதாக அவர் கூறுகின்றார்.அத்துடன் வைரஸ் நாட்டிற்குள் பரவி அது வேகமாக பரவுவதற்கான அபாயமும் ஏற்கனவே காணப்பட்டதாக அவர் குறிப்பிடுகின்றார்.மீனவர்கள் மத்தியில் இந்த வைரஸ் தாக்கம் அதிகளவில் ஏற்படுவதற்கான வாய்ப்பும் காணப்பட்டதாக அவர் தெரிவிக்கின்றார் .மீனவர்கள் மத்தியில் கொவிட் தொற்று பரவுகின்றமையினால் மீன்களை கொள்வனவு செய்ய பொதுமக்கள் மறுப்பு தெரிவித்து வருவதாகவும் எனினும் மீன்களின் ஊடாக கொரோனா வைரஸ் பரவும் என விஞ்ஞான ரீதியில் இதுவரை எங்கும் உறுதிப்படுத்தவில்லை என்பதே உண்மையாகும்.மீன்பிடித் துறைமுகங்களில் பிடித்து சேமிக்கப்பட்டுள்ள மீன்களை கொள்வனவு செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும்  என கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் காஞ்சன விஜேசேகர அண்மையில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்திருந்தார்.மீன்களின் ஊடாக கொவிட் தொற்று பரவும் அபாயம் கிடையாது எனவும் அவர் பதில் குறிப்பிட்டுள்ளார்.மீன்களை உட்கொள்வதினால் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் கொரோனா தொற்று ஏற்படாது என ருஹுனு பல்கலைக்கழகத்தின் கடற்றொழில் மற்றும் சமுத்திர ஆய்வு தொழில்நுட்பம், நீர்வாழ் உயிரினங்கள் பிரிவின் பேராசிரியர் ருச்சிர குமாரணதுங்க தெரிவிக்கின்றார்.கொரோனா ஏற்படும் என மீன்களை உட்கொள்ளாதிருப்பது முட்டாள்தனமான விடயம் எனவும் அவர் கூறுகின்றார்.கொரோனா வைரஸ் மீன்களுக்குள் செல்ல வாய்ப்புக்கள் மிகவும் குறைவு எனவும் அவ்வாறு மீன்களுக்கு வைரஸ் சென்றாலும் மீன்களை நன்றாக கழுவி அதிக வெப்பத்தில் சமைத்தால் ,வைரஸ் தொற்றை தவிர்க்கலாம் என அவர் குறிப்பிடுகின்றார்.70 செல்சியஸ் வெப்ப நிலைக்கு மேலாக வெப்பம் காணப்படுமாக இருந்தால் ,குறித்த வைரஸ் முற்றாக இல்லாது போய்விடும் எனவும் அவர் கூறுகின்றார் .உரிய சுகாதார நடைமுறைகளை பின்பற்றி மீன்கள் சமைக்கப்படுவதாக இருந்தால் ,எந்தவொரு சந்தர்ப்பத்திலும் மீன்களின் ஊடாக கொரோனா வைரஸ் தொற்றாது என பேராசிரியர் ருச்சிர குமாரணதுங்க தெரிவிக்கின்றார்.



இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் மீனவ சமூகம் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளதுடன் ,உள்நாட்டு தொழில்துறையாக கடற்றொழில் துறையும் முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது.

கொவிட் தொற்று மிக வேகமாக பரவி வருகின்ற பின்னணியில் மீனவ ஊரான திருகோணமலை கிண்ணியா மீன்பிடி சம்மேளனத்தின் ஏற்பாட்டில் ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்று அண்மையில் கிண்ணியா மீன்பிடி சம்மேளனத்தின் காரியாலய முன்றலில் நடைபெற்றது.மீனவ சம்மேளனத்தின் தலைவரான ரிஜால் பாயிஸ் தலைமையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் செயலாளர்,பொருளாளர் உட்பட பலரும் கலந்து தங்களுடைய கருத்துக்களை தெரிவித்திருந்தனர்.இதில் கருத்துத் தெரிவித்த தலைவர் ரஜால் பாயிஸ் , அனர்த்தங்கள் ஏற்படுகின்ற போது மீனவர்கள் தொடர்ந்தும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.இவ்வாறு இயற்கை அனர்த்தம் மற்றும் ஏனைய சம்பவம் நிகழும் போது மீனவர்களுக்கு அரசாங்கமும் வானிலை அதிகார மையமும் விடுக்கின்ற அறிவுறுத்தல்களை பின்பற்றி நடக்கின்ற போது மீனவர்கள் தமது அன்றாட தொழிலினை இழக்கின்ற சந்தர்ப்பம் ஏற்படுகின்றது.இவ்வாறு ஏற்படுகின்ற அனர்த்தங்களினால் மீனவர்கள் தங்களது வாழ்வாதாரங்களை இழந்து பாரிய கஷ்டத்தையே எதிர்நோக்கி வருகின்றனர்.கடந்த 11மாதங்களாக இயற்கை அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு இதுவரைக்கும் எந்தவித கொடுப்பனவு நிவாரணமும் கிடைக்கப் பெறவில்லை.இயற்கை அனர்த்த நிலைமைகளின் போது நிதி ஒதுக்குவதாக செய்திகளில் பார்க்கிறேன் ஆனால் மீனவர்களின் கைகளில் எதுவும் வந்து சேர்வதில்லை.தற்போதைய நிலைமையில் அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரித்துள்ளது.தேங்காய் விலை 120 ரூபாயும் ,சீனி விலை 140 ரூபாவாகவும் அரிசியின் விலை அதிகரித்து காணப்படுகின்றது.இவ்வாறான நிலையில் மீனவர்களுக்கு எவ்வித வருமானமும் இன்றி வாழும்போது இவர்களுக்கு உதவுவது என அவர் கேள்வி எழுப்பினார்.மீனவர்கள் செறிந்து வாழக்கூடிய பிரதேசமான பேருவளை மருதானை மீனவர்களை சந்தித்தபோது அவர்கள் இவ்வாறு குறிப்பிட்டனர்."தினமும் நாங்கள் காலையில் வலையை போட்டுவிட்டு வருகிறோம் எனினும் அந்த மீனை எடுத்து யாருக்கு விற்பனை செய்வது ,யாருக்கு கொடுப்பது ,யாரு எடுப்பார்கள் என்ற கேள்விகள் வினாக்குறியில் இருக்கின்றது.ஆனால் எங்களுடைய குடும்ப வறுமை காரணமாகவே இதனை தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறோம்.ஆனால் எங்களுடைய முதலுக்கு ஏற்ற வரவு கிடைக்கிறது  இல்லை இந்த கொரோனாவினால் பாரிய சிக்கலாகவே உள்ளது.(முஹம்மத் பஸ்ஹான்)

தொழிலுக்கு செல்லவும் விருப்பமில்லை. மீனை எடுக்கவும் வியபாரிகள் வருவதில்லை.நஷ்டத்திலே காலம் செல்கின்றது என கவலையுடன் தெரிவிக்கின்றார்.

(எம்.ஏ.எம் பஸ்லி)

எனவே ,இவர்களுக்கான தீர்வை அரசாங்கம் பெற்றுக் கொடுக்குமா என்பது கேள்விக்குறியாக உள்ளது.??


தொகுப்பு: அப்ரா அன்ஸார்

பட உதவி: யாஸீன் முஹம்மத்


 


உலகப்புகழ்பெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் தாயார் கரீமான பேகம் சற்று முன் காலமானதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

உடல் நலக்குறைவால் சில நாட்களாக அவதிப்பட்டு வந்த ஏஆர் ரஹ்மானின் தாயார் கரிமா பேகம், சிகிச்சை பெற்று வந்ததாகவும் சிகிச்சை பலனின்றி அவர் காலமானதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அவரது மறைவை அடுத்து திரையுலகினர் ஏ.ஆர்.ரஹ்மானின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

ஏ.ஆர்.ரஹ்மானின் தாயார் கரீமா பேகம் நடிகரும் இசையமைப்பாளருமான ஜிவி பிரகாஷின் பாட்டி என்பதும் குறிப்பிடத்தக்கது

 


முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பகுதியில் நேற்று அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளரின் வைரஸ் மிகவும் வீரியம் கூடியதாக காணப்படுவதாக வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் அறிவித்துள்ளார்.

இதனால் இத்தொற்றாளருடன் தொடர்பை மேற்கொண்ட நபர்கள் தங்களது பிரதேச சுகாதார வைத்திய அதிகாரியுடன் தொடர்புகொண்டு பி.சி.ஆர் பரிசோதனையை முன்னெடுக்குமாறு வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் மேலும் தெரிவித்துள்ளார்.

தற்போதைய வடமாகாண கொரோனா நிலைமைகள் தொடர்பில் நேற்று யாழ்ப்பாணத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே ஆ.கேதீஸ்வரன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்....

நேற்று யாழ்.போதனா வைத்தியசாலை ஆய்வு கூடத்தில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவை சேர்ந்த 37 வயதுடைய ஆண் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது.

இந்நபர் தம்புள்ளை சந்தைக்கு சென்று மரக்கறிகளை கொள்வனவு செய்து வந்து வியாபார நடவடிக்கைகளை மேற்கொள்பவரென உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

புதுக்குயிருப்பு பிரதேசத்தில் எழுமாறாக பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட போது இந் நபருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அவர் இப் பகுதியில் பல பொதுமக்களோடு தொடர்பிலே இருந்திருக்கின்றார்.

எங்களுக்கு கிடைத்த ஆய்வுகூட முடிவுகளை பார்க்கின்ற போது அவருக்கு ஏற்பட்டிருக்கும் கொரோனா மிகவும் வீரியமானதாக இருக்கின்றது.

எனவே அவரிலிருந்து பலருக்கு தொற்று ஏற்படக்கூடிய வாய்ப்புக்கள் இருக்கின்றன.

இதனால் அவரோடு தொடர்பிலே இருந்தவர்கள் தயவு செய்து உங்களது பிரதேச சுகாதார வைத்திய அதிகாரியுடன் தொடர்புகொண்டு பரிசோதனைகளை முன்னெடுப்பதன் மூலம் உங்களது பிரதேசத்திலே இந்த கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த முடியும்.

இதனை போன்றே வடமாகாணத்தில் இருக்கும் அனைத்து மக்களும் தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நபர்களோடு தொடர்புகளை மேற்கொண்டிருந்தால் உடனடியாக உங்களது பிரதேச சுகாதார வைத்திய அதிகாரியுடன் தொடர்பை மேற்கொண்டு பி.சி.ஆர் பரிசோதனைகளை மேற்கொள்வதன் மூலம் வட மாகாணத்தில் தொற்று பரவலை கட்டுப்படுத்த முடியுமென தெரிவித்துள்ளார்.

தினகரன்

 

வரக்காப்பொல பிரதேச செயலக பிரிவில் 12 கொவிட் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாகவும் அவர்களில் ஒருவர் கேகாலையில் தம்மிக பண்டாரவினால் தயாரிக்கப்பட்ட கொரோனாவை குணப்படுத்துவதாக கூறப்படும் பாணியினை அருந்தியவர் அனவும் பிராந்திய சுகாதார பரிசோதகர் ஹேமந்த குமார தெரிவித்துள்ளார். 

அவர்களை சிகிச்சைக்காக அனுப்பியுள்ளதாகவும் அவர்களது குடும்பத்தவர்களை தனிமைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும அவர் மேலும் தெரிவித்தார். (RH)




கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கான முன்னோடிப் பரீட்சை ஜனவரி மாதம் 9 ஆம் திகதி ஆரம்பமாகவிருப்பதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்துள்ளார்.

11 பாடவிதானங்களுக்கான முன்னோடிப் பரீட்சைகள் இடம்பெறவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் பணிகள் அடுத்த மாதம் 15ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளதாகவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் கூறினார். ஐந்து கட்டங்களின் கீழ் 17 நகரங்களில் இந்த பணிகள் நடைபெற்று வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

உயர்தரப் பரீட்சை விடைகளை மதிப்பீடு செய்யும் பணிகள் கடந்த 25 ஆம்திகதி ஆரம்பமானது.

அரசாங்க தகவல் திணைக்களம்

கஹட்டோவிட்ட முஸ்லிம் பாலிகா வித்தியாலய மாணவி முஹம்மத் யுஸ்ரி பாத்திமா முபஷ்ஷிராவின் சிறுநீரக மாற்று சத்திர சிகிச்சைக்கு பணம் திரட்டுவதற்காக 2020 பெப்ரவரி 16ஆம் திகதி  நடாத்தப்பட்ட கிடுகு விற்பனையின் மூலம் திரட்டப்பட்ட 1,049,250/- பணம் நேற்றைய தினம் 27-12-2020, ஞாயிற்றுக்கிழமை பாடசாலை முற்றவெளியில் வைத்து மாணவியின் தந்தையிடம் கையளிக்கப்பட்ட போது எடுக்கப்பட்ட படங்கள்:




















 இன்று (27) நான்கு கொவிட் மரணங்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார். இதனையடுத்து நாட்டில் பதிவான கொவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 191 ஆக உயர்வடைந்துள்ளது.

இன்று பதிவான மரணங்களின் விபரம்:

பிடகோட்டே பிரதேசத்தை சேர்ந்த 66 வயதுடைய ஆண் நேற்று (26) ஹோமாகம வைத்திசாலையில் மரணித்துள்ளார்

ராகமை பிரதேசத்தை சேர்ந்த 75 வயதான பெண் நேற்று (26) முல்லேரியா ஆதார வைத்தியசாலையில் மரணித்துள்ளார்

கடவத்தை பிரதேசத்தை சேர்ந்த 78 வயதான பெண் நேற்று முன் தினம் (25) முல்லேரியா ஆதார வைத்தியசாலையில் மரணித்துள்ளார்

வவுனியா பிரதேசத்தை சேர்ந்த 52 வயதான பெண் நேற்று (26) அநுராதபுர போதனா வைத்தியசாலையில் மரணித்துள்ளார்.



 இன்று (27) மேலும் 206 கொவிட் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். இன்று இதுவரை 668 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து இரண்டாவது கொவிட் அலையில் இதுவரை இனங்காணப்பட்ட தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 37,360 ஆக உயர்வடைந்துள்ளது.



 கொவிட் பாதிப்புடன் மரணிப்பவர்களை அடக்கம் செய்வதற்கு அனுமதி வழங்குமாறு அமரபுர மற்றும் ராமன்ய நிக்காயாக்களின் சர்வ மத உறவுகளுக்கான துணைக்குழு ஊடாக ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் குறித்த நிக்காயாக்கள் மூலமான விசேட கடிதம் ஒன்று ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. அமரபுர மற்றும் ராமன்ய நிக்காயாக்களில் 21,000 இற்கும் மேற்பட்ட பௌத்த தேரர்கள் அங்கம் வகிக்கின்றனர்.

மேலும் குறித்த கடிதத்தில் நிக்காயாக்களின் பதிவாளர்கள் உட்பட இந்து, கிறிஸ்தவ, இஸ்லாமிய மதகுருமார்களின் கையொப்பங்களும் இடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.










Blogger இயக்குவது.